26 January 2011

ஸபர் மாதத்தின் சிறப்பு !


 
                                                   
அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

இந்த  மாதம்  ஸபருல்  முஸப்பர்  எனப்படும். இதன்  பொருள்  வெற்றி தரும்  மாதமாகிய  ஸபர்  {பயணம்} என்பதாகும்.



சைத்தான்  எதையுமே  தலை  கீழாக்கி  மக்களை  வழிகெடுக்கக்  கூடியவன்.
அவன்  சிறப்பிற்குரிய  மாதத்தை  சிறப்பில்லாத  மாதமாக்கி, பாவமன்னிப்பு 
கேட்டு  தவ்பா  செய்ய  வேண்டிய  மக்களை, நபியின்  பெயராலேயே பாவங்களை  செய்ய  வைத்து  வழி  கெடுத்துவிட்டான். சிந்தித்து செயல்பட்டு  வெற்றி  பெற  வேண்டிய  சமுதாய  மக்கள், சைத்தானின் கையில்  வெற்றியை  கொடுத்து  விட்டார்கள்.


நபி{ஸல்}அவர்களும், தோழர்களும்  வழக்கம்  போலவே  பர் மாதத்திலும்  பல  பிரயாணங்களையும்  தவா  பணிகளையும்  மேற்கொண்டு  வெற்றிகளை  அடைந்தார்கள்.  ஆயிஷா{ரலி} அவர்களுடன், நபியவர்களுக்கு  பர்மாதத்தில்  நிக்காஹ்  நடந்தது.  நபி{ஸல்} அவர்களுடன்  ஆயிஷா{ரலி}  அவர்கள்  வாழ்ந்த  அற்புதமான  வாழ்வை வரலாறு  கூறி  கொண்டிருக்கிறது. அன்போடும்  ஆதரவோடும்  இனிய வாழ்வை  வாழ்ந்தார்கள்.


நபியவர்கள்  வருமுன்  அரேபிய  நாட்டில்  நிலவிய  மூட  நம்பிக்கைகளில் 
ஒன்று  தான்  ஸபர்மாதம்  பீடைமாதம்  என்பதாகும். நபி{ஸல்}அவர்கள் 
தூதுத்துவம்  பெற்ற பின், அங்கு  நிலவிய  எல்லா  மூடத்தனங்களையும்
சடங்குகளையும்  சவுக்கால்  அடித்து, காலடியில்  போட்டு  மிதித்து அழித்தார்கள். ஸஹாபாக்களும், நேர்வழி  பெற்றவர்களும்  நேரான வழியிலேயே  வாழ்தார்கள். பசி, பட்டினியில்  கிடந்தாலும்  மார்க்கத்தை உயிரென  போற்றி  பாதுகாத்தார்கள். மாபெரும்  வெற்றிகளை அடைந்தார்கள்.


நம்  நாட்டில்  இருக்கிற  மூட  நம்பிக்கைகள்  போதவில்லை  என் கருதி, அந்த  கால  அரபு  நாட்டு  மூட  நப்பிக்கையையும்  இறக்குமதி  செய்து  நம் முன்னோர்கள்  இங்கேயும்  பரப்பி  விட்டார்கள். நம்மவர்களும்  ஈமானுக்கு விரோதமான-அறிவுக்கு  புறம்பான  மூடத்தனங்களை  கடை  பிடித்து வருகிறார்கள். இம்மாதத்தை  பீடை  மாதமென  ஒதுக்கி  வைக்க இஸ்லாத்தில்  இடமில்லை  என்று  நபி {ஸல்} அவர்கள்  கூறுகிறார்கள்.


ஸபர்  மாதத்தில்  தான்  நபி{ஸல்}  அவர்களுக்கு  உடல்  நலம் பாதிக்கப்பட்டது  என்பதால்  அதை  பீடை  மாதம்  என்  கருதுவதாக கூறப்படுகிறது. அதே  மாதத்தில்  தான்  நபியவர்கள்  உடல்  நலனும் பெற்றார்கள். அப்படியானால்  அம்மாதம்  மேலும்  சிறப்பு  பெற்று விடுகிறதே.{நாம் சிந்திக்க கூடாதா?}


இஸ்லாத்தின்  பெயரால்  கதை  விடப்பட்ட  காலத்தில்  ஸபர்  மாதத்தின் 
கடைசி  புதன்று  ஒரு  லட்சத்து  எழுபதாயிரம்  முசீபத்துகள்  வானத்தில் இருந்து  இறங்குகிறது  என்று  கதை  பரப்பி  இருக்கிறார்கள். இதை  யார் சொன்னது  என்று  யாருக்கும்  தெரியாது. இந்த  முசீபத்தை  நீங்குவதற்காக மாஇலை,  தட்டு, பனை ஓலை  போன்றவற்றில்  சில  வார்த்தைகளை அரபியில் எழுதி, அதை  வாங்கி  கரைத்து  குடித்தால்  அந்த  முசீபத்  நீங்கி விடும்  என்று  நம்பி  செய்து  கொண்டு  இருக்கிறார்கள்.


அன்று  மாலையில்  கடற்கரைக்கு  போவதும், கடல்  இல்லாதவர்கள் புற்களை  மிதிக்க  வேண்டும்  என்றெல்லாம்  நம்பிக்கை.


உங்கள்  அறிவை  பயன்படுத்தி  யோசித்து  பாருங்கள்.இதெல்லாம் தூய்மையான  மார்க்கத்தில்  இருக்குமா?இருக்கிறதா?


நபியாக  இருந்தாலும், நாமாக  இருந்தாலும்  துன்பத்தை  கொடுப்பதும் 
அதை  தடுப்பதும்  அல்லாஹ் ஒருவனே.நோய்  வந்தால்  மருத்துவம் 
செய்யுங்கள்  என்று  என்று  தான்  நபி {ஸல்}  அவர்கள்  கூறுகிறார்கள்.
மாஇலையில்  எழுதி  குடித்தால்  நோய் எப்படி நீங்கும்.


எனவே  ஈமானை{இதயத்தை}கிழிக்கின்ற  இத்தகைய  மூட  நம்பிக்கைகளை  விட்டொழித்து,  நேரான  பாதையில்  செல்ல அனைவருக்கும்  அல்லாஹ்  நேர்வழி  காட்டுவானாக !

                                    

19 comments:

அந்நியன் 2 said...

அருமையான பகிர்வு மூட நம்பிக்கையை தகர்த்து எறிவோம்.

Riyas said...

நல்ல பதிவு..

தூயவனின் அடிமை said...

நல்ல பகிர்வு.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்ல ஆக்கபூர்வமான விழிப்புணர்வூட்டும் பதிவிற்கு மிக்க நன்றி.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...புல் மிதிக்கனுமா?

அடக்கொடுமையே.. அதுக்காக இப்டி ஏ எதுக்குன்னு கேக்காமயா???? ம்ம்..இதுவே பாம்ப மிதிக்கனும்னு எவனாச்சும் சொல்லி இருந்தா செய்வானுகலா...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள் சகொ..

அன்புடன்
ரஜின்

ரஹீம் கஸ்ஸாலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மூடநம்பிக்கை, பித் அத், ஷிர்க் போன்ற அனாச்சாரங்களை தோலுரித்து காட்டும் உங்கள் பணிக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக...ஆமீன்

ஆயிஷா அபுல். said...

அந்நியன் 2 கூறியது...

வாங்க சகோ

உங்கள் வருகைக்கு,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

asiya omar கூறியது...

பகிர்வுக்கு நன்றி.

வாங்க சகோ

நன்றி asiya omar.

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

விழிப்புணர்வுட்டும் பகிர்வு

வாழ்த்துக்கள் தோழி

ஆயிஷா அபுல். said...

Riyas கூறியது...

நல்ல பதிவு..

வாங்க சகோ

உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஆயிஷா அபுல். said...

//இளம் தூயவன் கூறியது...

நல்ல பகிர்வு.//

வாங்க சகோ

நன்றி.

ஆயிஷா அபுல். said...

//முஹம்மத் ஆஷிக் கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்ல ஆக்கபூர்வமான விழிப்புணர்வூட்டும் பதிவிற்கு மிக்க நன்றி.//

வாங்க சகோ

வ அழைக்கும் சலாம் வரஹ்..

உங்கள் வருகைக்கு,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//RAZIN ABDUL RAHMAN கூறியது..//

வாங்க சகோ

வ அழைக்கும் சலாம்

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//ரஹீம் கஸாலி கூறியது...//


வாங்க சகோ!

வ அழைக்கும் சலாம் வரஹ்..

அல்லாஹ் உங்கள் துஆவை

கபூலாக்குவனாக!ஆமீன்.

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

ஆமினா கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


வாங்க சகோ!

வ அழைக்கும் சலாம் வரஹ்..

உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

ரெம்ப நன்றி தோழி.

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள்
பதிவு அருமை அவசியமும்கூட.

ஆயிஷா அபுல். said...

//ராஜவம்சம் கூறியது...

வாழ்த்துக்கள்
பதிவு அருமை அவசியமும்கூட.//

வாங்க சகோ!

அஸ்ஸலாமு அழைக்கும்

நீண்ட நாட்களுக்கு பின் வருகை தந்து இருக்கீர்கள் சகோ,


உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்,

வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

enrenrum16 said...

இந்த ஸபர் மாத ஃபித் அத் இன்னும் தொடர்கிறதா? எனக்குத் தெரிந்து அந்த மாதத்தில் மீன் வாங்கமாட்டார்கள் சிலர்...நீங்கள் கூறியிருக்கும் மற்றவை புதியதாக கேள்விப்படுகிறேன்... இது போல் செய்பவர்கள் உங்களுக்கு யாராவது தெரிந்தால் அவர்களிடம் நேரடியாக சொல்லிப் பாருங்களேன்... திருந்தினால் அவர்களுக்கும் திருந்தாவிட்டாலும் உங்களுக்கும் நன்மை கிடைக்கும்,இன்ஷா அல்லாஹ்...

இந்த பதிவின் மூலம் அத்தகைய மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் ஒருவராவது திருந்தினாலே உங்கள் பதிவிற்கு மாபெரும் வெற்றி ஆயிஷா....

ஆயிஷா அபுல். said...

//enrenrum16 கூறியது...//

அஸ்ஸலாமு அழைக்கும்!


உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்,
ரெம்ப நன்றி.

Post a Comment