05 January 2011

தூக்கம் சிறிய மவ்த் {மரணம்}


அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

இறைவன்  மரணிக்காதவர்களின் உயிர்களை  தூக்கத்தில் கைப்பற்றுகிறான் என்று குர்ஆனில் [39:42] கூறப்பட்டுள்ளதே .உறங்கும் போது மனிதன் 
உயிருடன் தான் இருக்கிறான்.

அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்போதும், மரணிக்காதவற்றை
அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து 
விட்டானோ அதை {தன்னிடத்தில் }நிறுத்திக்  கொள்கிறான்.மீதிள்ளவற்றை 
ஒரு  குறிப்பிட்ட தவணை வரை{வாழ}அனுப்பி விடுகிறான்.

இஸ்லாத்தில் மட்டுமல்லாமல் எல்லா மதங்களிலும் தூக்கம் ஒரு 
சிறிய இறப்பு-என்ற நம்பிக்கை உள்ளதை காணலாம்.ஆழ்ந்து  உறங்குபவனுக்கு உலகில் நடப்பது எதுவும் தெரியாது.உயிர் மூச்சு            மட்டும்  ஓடிக் கொண்டிருக்கும்.நல்லது -கெட்டது எதுவுமே தெரியாது.
அசந்து தூங்குபவன் இறந்த சடலத்தைப் போன்ற நிலையில் இருக்கிறான்.
எனவேதான் இதனை சின்ன மவ்த்{மரணம்}எனக் கூறுவர்.

அல்லாஹ் நாடிவிட்டால் இந்த சின்ன மரணம் முடிவான மரணமாகவும் 
ஆகிவிடும்.தூங்கச் சென்றவர் எழவே இல்லை.மரணித்து விட்டார் 
என சொல்லப்படுவதை கேட்டிருக்கலாம்.மனிதன் தினந்தோறும் தனது 
கடைசி பயணமான - மரணத்தை நினைக்க வேண்டுமென்ற நிலையில் 
தான், அல்லாஹ் தூக்கம் என்கிற சிறிய மவ்த்தை தந்துள்ளான் என்பதை 
மறக்க கூடாது.எனவே நாம் தூங்குவதற்கு முன்பு ஓதுமாறு  நபி{ஸல்} அவர்கள் கற்று தந்த துஆ 

யா அல்லாஹ் உனது நினைவுடனேயே நான் தூங்குகிறேன்.உனது
நினைவுடனேயே என்னை எழுப்புவாயாக.ஒரு வேளை இந்த தூக்கத்தில் 
எனது உயிரை பறித்துவிடடால் அதற்கு கருணை செய்வாயாக.எனது 
உயிரை திருப்பி தந்து வாழ விட்டால் நல்லோர்களுடன் வாழச்செய்வாயாக!

எனவே தூக்கம் என்பது மரணமில்லை என்றாலும் மரணித்தவரின் 
நிலைமையை உணரச்செயவதே.  தூக்கம் சிறிய மவ்த் {மரணம்}
                                                                       

32 comments:

ஸாதிகா said...

//எனவே தூக்கம் என்பது மரணமில்லை என்றாலும் மரணித்தவரின்
நிலைமையை உணரச்செயவதே//உண்மை வரிகள் .

தூயவனின் அடிமை said...

சகோதரி நல்ல விளக்கம். மனிதர்கள் மரணத்தை நினைத்து விட்டால் தான் செய்யும் தவறுகளை நிறுத்தி விடுவார்கள்.

ஆயிஷா அபுல். said...

வாங்க ஸாதிகா!
கருத்துக்கு நன்றி.

ஆயிஷா அபுல். said...

//இளம் தூயவன் சொன்னது…

சகோதரி நல்ல விளக்கம். மனிதர்கள் மரணத்தை நினைத்து விட்டால் தான் செய்யும் தவறுகளை நிறுத்தி விடுவார்கள்.//


வாங்க சகோ இளமதூயவன் !

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.

அந்நியன் 2 said...

அருமையான ஒரு பதிவு.
மரணம் என்பது ஒரு ஆழ்ந்த நித்திரையே... சிறிது வினாடிகளில் விழித்து எழுவதுதான் தூக்கம் சிறிது நாள் கழித்து கண் விழிக்கும் போது இறுதி நாள் நெருங்கி இருக்கும்.

ஆமினா said...

நல்ல விளக்கங்க, பகிர்வு!!!

மரணத்திற்கு அஞ்சி நடந்தாலே தவறுகள்,குற்றங்கள் குறையும்

ஆயிஷா அபுல். said...

//அந்நியன் 2 சொன்னது…

அருமையான ஒரு பதிவு.

மரணம் என்பது ஒரு ஆழ்ந்த நித்திரையே... சிறிது வினாடிகளில் விழித்து எழுவதுதான் தூக்கம் சிறிது நாள் கழித்து கண் விழிக்கும் போது இறுதி நாள் நெருங்கி இருக்கும்.//


வாங்க சகோ அயுப் !

நல்ல கருத்து.

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.


புதிய வசந்தத்தில் ஆமினா பதில் உங்களுக்கு

வந்ததுள்ளது.

நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//ஆமினா சொன்னது
நல்ல விளக்கங்க, பகிர்வு!!!

மரணத்திற்கு அஞ்சி நடந்தாலே தவறுகள்,குற்றங்கள் குறையும்//

வாங்க ஆமினா


மனிதர்கள் மரண தருவாயில் தான் குற்றங்களை
உணறுவார்கள்.

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.

Unknown said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!

ஆயிஷா அபுல். said...

//Maheswaran.M சொன்னது…

//இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!//

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்.

உங்க பிளாக் டிசைன் சூப்பர்.

http://puthiyavasantham.blogspot.com
இதையும் பார்க்கவும்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

//யா அல்லாஹ்... உனது நினைவுடனேயே நான் தூங்குகிறேன்.உனது நினைவுடனேயே என்னை எழுப்புவாயாக.//

(அல்லாஹும்ம பிஸ்மிக்க வமூவ்த்து வஅஹ்யா)

நல்ல பதிவு.

//மரணம் என்பது ஒரு ஆழ்ந்த நித்திரையே... சிறிது வினாடிகளில் விழித்து எழுவதுதான் தூக்கம் சிறிது நாள் கழித்து கண் விழிக்கும் போது இறுதி நாள் நெருங்கி இருக்கும்//

//மரணத்திற்கு அஞ்சி நடந்தாலே தவறுகள்,குற்றங்கள் குறையும்//

//மனிதர்கள் மரண தருவாயில் தான் குற்றங்களை
உணறுவார்கள்.//

நல்ல பின்னூட்டங்கள்.

நன்றி.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
சகோதரி அவர்களுக்கு
மார்க்க சிந்தனையுள்ள நல்ல பதிவு
அல்லாஹ் பரக்கத் செய்வானாக
கடந்த 10 நட்களாக வேலைப் பளு அதிகம் அதனால் என்னுடைய ப்ளாக்கில் கூட புதிய இடுகை இட முடியவில்லை
என்னவளை சவூதிக்கி கூட்டிவருவதற்கான விசா ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன் அதற்கே நேரம் சரியாக இருந்தது
சவூதியில் குடும்பத்தோடு இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் துஆ செய்யுங்கள்

அப்புறம் புத்தாண்டு வாழ்த்து சம்பந்தமாக விளக்கம் பெற http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/puththaantu_kontatalamaa/ .
இந்த லிங்க்யில் உள்ள விளக்கத்தை முடிந்தால் படிக்கவும்

சகோதரன்
ஹைதர் அலி

RAZIN ABDUL RAHMAN said...

சகோ ஆயிஷா அவர்களே.
அஸ்ஸலாமு அலைக்கும்...நல்ல பயனுள்ள பதிவு.

எவ்வித சிந்தனையும் இல்லாமல்,தினமும்,உறங்கி,தினமும் விழித்துக்கொண்டு இருக்கிறோம்...உறக்கம் என்பது சிறிய மரணம்,அது யாருக்கும் தங்களின் பெரிய மரணத்தை நினைவு படுத்துவதில்லை என்பதும் உண்மை.

அதை நினைவு படுத்த இந்தப்பதிவு பயன்படுகிறது.

நீங்கள் உறங்குவது போன்றே மரணிப்பீர்கள்,விழிப்பது போன்றே எழுப்பப்படுவீர்கள் என்ற வசனம்,உறக்கத்தை மரணத்திற்கு ஒப்பாக்குவதும்,விழிப்பதை மறுமைக்கு ஒப்பாக்குவதுமான இருவரிகளில் சிந்திக்க ஆயிரம் செய்திகளை கொண்டுள்ளது என்பது உண்மை..

அல்லாஹ் மிக்க மேலானவன்,தீர்க்கமான அறிவுடையவன்..

அன்புடன்
ரஜின்

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// மனிதன் தினந்தோறும் தனது
கடைசி பயணமான - மரணத்தை நினைக்க வேண்டுமென்ற நிலையில்
தான், அல்லாஹ் தூக்கம் என்கிற சிறிய மவ்த்தை தந்துள்ளான் என்பதை
மறக்க கூடாது.///

கண்டிப்பாக. தூக்கத்தை பற்றியும் மரணத்தை பற்றியும் அழகாக விளக்கியிருக்கீங்க மச்சி.

நல்ல பகிர்வு.

ஆயிஷா அபுல். said...

வ அழைக்கும் சலாம் {வரஹ்}

வாங்க சகோ ஆஷிக் !

துஆவை அரபியில் கொடுத்ததற்கும்,

வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஆயிஷா அபுல். said...

//ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
சகோதரி அவர்களுக்கு
மார்க்க சிந்தனையுள்ள நல்ல பதிவு
அல்லாஹ் பரக்கத் செய்வானாக//

வ அழைக்கும் சலாம் {வரஹ்}

வாங்க சகோ ஹைதர் அலி !

வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
அல்லாஹ் உங்கள் துஆவை கபூலாக்குவனாக!


//என்னவளை சவூதிக்கி கூட்டிவருவதற்கான விசா ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.
சவூதியில் குடும்பத்தோடு இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் துஆ செய்யுங்கள்//


ரெம்ப சந்தோஷம் சகோ.நானும் என்னுடைய
தொழுகையில் உங்களுக்காக கண்டிப்பாக
துஆ செய்கிறேன்.


//அப்புறம் புத்தாண்டு வாழ்த்து சம்பந்தமாக விளக்கம் பெற http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/puththaantu_kontatalamaa/
இந்த லிங்க்யில் உள்ள விளக்கத்தை முடிந்தால் படிக்கவும்//


அந்த லிங்க் உள்ளே போய் படித்தேன் சகோ.
என் பதிவை அளித்து விட்டேன்.அது பாவமான
காரியம் என்றால் அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!
தவறை சுட்டிகாட்டியதற்கு ரெம்ப ரெம்ப நன்றி சகோ.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஆயிஷா அபுல். said...

//RAZIN ABDUL RAHMAN சொன்னது…

சகோ ஆயிஷா அவர்களே.
அஸ்ஸலாமு அலைக்கும்...நல்ல பயனுள்ள பதிவு.//

வ அழைக்கும் சலாம்..

வாங்க சகோ RAZIN ABDUL RAHMAN !

வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.


//நீங்கள் உறங்குவது போன்றே மரணிப்பீர்கள்,விழிப்பது போன்றே எழுப்பப்படுவீர்கள் என்ற வசனம்,உறக்கத்தை மரணத்திற்கு ஒப்பாக்குவதும்,விழிப்பதை மறுமைக்கு ஒப்பாக்குவதுமான இருவரிகளில் சிந்திக்க ஆயிரம் செய்திகளை கொண்டுள்ளது என்பது உண்மை..//

நல்ல பின்னூட்டம் சகோ !

அல்லாஹ் மிக்க மேலானவன்,தீர்க்கமான அறிவுடையவன்..


நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஆயிஷா அபுல். said...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…


//கண்டிப்பாக. தூக்கத்தை பற்றியும் மரணத்தை பற்றியும் அழகாக விளக்கியிருக்கீங்க மச்சி.

நல்ல பகிர்வு.//

வாங்க சேக !

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கொழுந்தனாரே.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

புல்லாங்குழல் said...

விழிப்பில் நான் முதளாளி..நான் டாக்டர்...நான் அமைச்சர்... தூக்கத்தில் 'நான்' நம்மை விட்டு தற்காலிகமாக அகலுவதால் அமைதி. அங்கே நான் அடிமையாகிவிடுகின்றது. அவன் பொறுபேற்று கொள்கின்றான். தூங்கும் போது நம்மை புரட்டி புரட்டி போடுவதாக அவன் சொல்கின்றான்

புல்லாங்குழல் said...

சிந்தனையை தூண்டிய பகிர்வுக்கு நன்றி!

enrenrum16 said...

//தூக்கம் ஒரு சிறிய மௌத்// நினைக்கும் போது சிறிய கலக்கம் ஏற்படுவதுண்டு... அடுத்த நிமிடமே இம்மைப் பற்றிய நினைவுகள் வந்து விடுகின்றன... இந்த நிலையில் உங்கள் பதிவு மறுமையைப் பற்றிய அச்சத்தை உண்டாக்குகிறது... இறைவன் நம் அனைவருக்கும் ஸக்ராத்துல் மௌத்தை லேசாக்கி வைப்பானாக..

என்றென்றும்16

enrenrum16 said...

//தூக்கம் ஒரு சிறிய மௌத்// நினைக்கும் போது சிறிய கலக்கம் ஏற்படுவதுண்டு... அடுத்த நிமிடமே இம்மைப் பற்றிய நினைவுகள் வந்து விடுகின்றன... இந்த நிலையில் உங்கள் பதிவு மறுமையைப் பற்றிய அச்சத்தை அதிகப்படுத்துகிறது... இறைவன் நம் அனைவருக்கும் ஸக்ராத்துல் மௌத்தை லேசாக்கி வைப்பானாக..

என்றென்றும்16

ஆயிஷா அபுல். said...

//ஒ.நூருல் அமீன் சொன்னது…

விழிப்பில் நான் முதளாளி..நான் டாக்டர்...நான் அமைச்சர்... தூக்கத்தில் 'நான்' நம்மை விட்டு தற்காலிகமாக அகலுவதால் அமைதி. அங்கே நான் அடிமையாகிவிடுகின்றது. அவன் பொறுபேற்று கொள்கின்றான். தூங்கும் போது நம்மை புரட்டி புரட்டி போடுவதாக அவன் சொல்கின்றான்//

//ஒ.நூருல் அமீன் சொன்னது…

சிந்தனையை தூண்டிய பகிர்வுக்கு நன்றி!//

வாங்க சகோ!

நல்ல பின்னூட்டம்.

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஆயிஷா அபுல். said...

//enrenrum16 சொன்னது…

//தூக்கம் ஒரு சிறிய மௌத்// நினைக்கும் போது சிறிய கலக்கம் ஏற்படுவதுண்டு... அடுத்த நிமிடமே இம்மைப் பற்றிய நினைவுகள் வந்து விடுகின்றன... இந்த நிலையில் உங்கள் பதிவு மறுமையைப் பற்றிய அச்சத்தை உண்டாக்குகிறது... இறைவன் நம் அனைவருக்கும் ஸக்ராத்துல் மௌத்தை லேசாக்கி வைப்பானாக.. //


வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

Asiya Omar said...

தூக்கம்,மரணம் ஒப்பிட்டு கூறி சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

Jaleela Kamal said...

//யா அல்லாஹ் உனது நினைவுடனேயே நான் தூங்குகிறேன்.உனது
நினைவுடனேயே என்னை எழுப்புவாயாக.ஒரு வேளை இந்த தூக்கத்தில்
எனது உயிரை பறித்துவிடடால் அதற்கு கருணை செய்வாயாக.எனது
உயிரை திருப்பி தந்து வாழ விட்டால் நல்லோர்களுடன் வாழச்செய்வாயாக!/

மிக அருமை ஆயிஷா.
ஓவ்வொரும் ஓத கேட்க வேண்டிய அருமையான துஆ

ஆயிஷா அபுல். said...

//asiya omar சொன்னது…

தூக்கம்,மரணம் ஒப்பிட்டு கூறி சிந்திக்க வைத்து விட்டீர்கள்.//

வாங்க asiya omar!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஆயிஷா அபுல். said...

//Jaleela Kamal சொன்னது…

//யா அல்லாஹ் உனது நினைவுடனேயே நான் தூங்குகிறேன்.உனது
நினைவுடனேயே என்னை எழுப்புவாயாக.ஒரு வேளை இந்த தூக்கத்தில்
எனது உயிரை பறித்துவிடடால் அதற்கு கருணை செய்வாயாக.எனது
உயிரை திருப்பி தந்து வாழ விட்டால் நல்லோர்களுடன் வாழச்செய்வாயாக!/

//மிக அருமை ஆயிஷா.
ஓவ்வொரும் ஓத கேட்க வேண்டிய அருமையான துஆ//


வாங்க Jaleela Kamal !

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

இந்த உலக வாழ்க்கை,இறைவன் நாடி

விட்டால் அற்ப நேரம் தான் சகோதரி.

இதை ஒவ்வொரு மனிதனும் உணர்த்து

நடக்கணும்.அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

நன்றி சகோதரி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

mohamedali jinnah said...

யா அல்லாஹ் உனது நினைவுடனேயே நான் தூங்குகிறேன்.உனது
நினைவுடனேயே என்னை எழுப்புவாயாக.ஒரு வேளை இந்த தூக்கத்தில்
எனது உயிரை பறித்துவிடடால் அதற்கு கருணை செய்வாயாக.எனது
உயிரை திருப்பி தந்து வாழ விட்டால் நல்லோர்களுடன் வாழச்செய்வாயாக!

அருமையான வரிகள் . நினைவில் வைத்து தினமும் அல்லாஹ்வை வேண்ட வேண்டிய துவா .

WOW
Alhamthulillah

இராஜராஜேஸ்வரி said...

தூக்கம்,மரணம் ஒப்பிட்டு கூறி சிந்திக்க வைத்து விட்டீர்கள்.//

ஆயிஷா அபுல். said...

nidurali கூறியது...

யா அல்லாஹ் உனது நினைவுடனேயே நான் தூங்குகிறேன்.உனது நினைவுடனேயே என்னை எழுப்புவாயாக.ஒரு வேளை இந்த தூக்கத்தில் எனது உயிரை பறித்துவிடடால் அதற்கு கருணை செய்வாயாக.எனது உயிரை திருப்பி தந்து வாழ விட்டால் நல்லோர்களுடன் வாழச்செய்வாயாக!

அருமையான வரிகள் . நினைவில் வைத்து தினமும் அல்லாஹ்வை வேண்ட வேண்டிய துவா .//


வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஆயிஷா அபுல். said...

//இராஜராஜேஸ்வரி கூறியது...

தூக்கம்,மரணம் ஒப்பிட்டு கூறி சிந்திக்க வைத்து விட்டீர்கள்.//

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

Post a Comment