26 January 2011

ஸபர் மாதத்தின் சிறப்பு !


 
                                                   
அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

இந்த  மாதம்  ஸபருல்  முஸப்பர்  எனப்படும். இதன்  பொருள்  வெற்றி தரும்  மாதமாகிய  ஸபர்  {பயணம்} என்பதாகும்.சைத்தான்  எதையுமே  தலை  கீழாக்கி  மக்களை  வழிகெடுக்கக்  கூடியவன்.
அவன்  சிறப்பிற்குரிய  மாதத்தை  சிறப்பில்லாத  மாதமாக்கி, பாவமன்னிப்பு 
கேட்டு  தவ்பா  செய்ய  வேண்டிய  மக்களை, நபியின்  பெயராலேயே பாவங்களை  செய்ய  வைத்து  வழி  கெடுத்துவிட்டான். சிந்தித்து செயல்பட்டு  வெற்றி  பெற  வேண்டிய  சமுதாய  மக்கள், சைத்தானின் கையில்  வெற்றியை  கொடுத்து  விட்டார்கள்.


நபி{ஸல்}அவர்களும், தோழர்களும்  வழக்கம்  போலவே  பர் மாதத்திலும்  பல  பிரயாணங்களையும்  தவா  பணிகளையும்  மேற்கொண்டு  வெற்றிகளை  அடைந்தார்கள்.  ஆயிஷா{ரலி} அவர்களுடன், நபியவர்களுக்கு  பர்மாதத்தில்  நிக்காஹ்  நடந்தது.  நபி{ஸல்} அவர்களுடன்  ஆயிஷா{ரலி}  அவர்கள்  வாழ்ந்த  அற்புதமான  வாழ்வை வரலாறு  கூறி  கொண்டிருக்கிறது. அன்போடும்  ஆதரவோடும்  இனிய வாழ்வை  வாழ்ந்தார்கள்.


நபியவர்கள்  வருமுன்  அரேபிய  நாட்டில்  நிலவிய  மூட  நம்பிக்கைகளில் 
ஒன்று  தான்  ஸபர்மாதம்  பீடைமாதம்  என்பதாகும். நபி{ஸல்}அவர்கள் 
தூதுத்துவம்  பெற்ற பின், அங்கு  நிலவிய  எல்லா  மூடத்தனங்களையும்
சடங்குகளையும்  சவுக்கால்  அடித்து, காலடியில்  போட்டு  மிதித்து அழித்தார்கள். ஸஹாபாக்களும், நேர்வழி  பெற்றவர்களும்  நேரான வழியிலேயே  வாழ்தார்கள். பசி, பட்டினியில்  கிடந்தாலும்  மார்க்கத்தை உயிரென  போற்றி  பாதுகாத்தார்கள். மாபெரும்  வெற்றிகளை அடைந்தார்கள்.


நம்  நாட்டில்  இருக்கிற  மூட  நம்பிக்கைகள்  போதவில்லை  என் கருதி, அந்த  கால  அரபு  நாட்டு  மூட  நப்பிக்கையையும்  இறக்குமதி  செய்து  நம் முன்னோர்கள்  இங்கேயும்  பரப்பி  விட்டார்கள். நம்மவர்களும்  ஈமானுக்கு விரோதமான-அறிவுக்கு  புறம்பான  மூடத்தனங்களை  கடை  பிடித்து வருகிறார்கள். இம்மாதத்தை  பீடை  மாதமென  ஒதுக்கி  வைக்க இஸ்லாத்தில்  இடமில்லை  என்று  நபி {ஸல்} அவர்கள்  கூறுகிறார்கள்.


ஸபர்  மாதத்தில்  தான்  நபி{ஸல்}  அவர்களுக்கு  உடல்  நலம் பாதிக்கப்பட்டது  என்பதால்  அதை  பீடை  மாதம்  என்  கருதுவதாக கூறப்படுகிறது. அதே  மாதத்தில்  தான்  நபியவர்கள்  உடல்  நலனும் பெற்றார்கள். அப்படியானால்  அம்மாதம்  மேலும்  சிறப்பு  பெற்று விடுகிறதே.{நாம் சிந்திக்க கூடாதா?}


இஸ்லாத்தின்  பெயரால்  கதை  விடப்பட்ட  காலத்தில்  ஸபர்  மாதத்தின் 
கடைசி  புதன்று  ஒரு  லட்சத்து  எழுபதாயிரம்  முசீபத்துகள்  வானத்தில் இருந்து  இறங்குகிறது  என்று  கதை  பரப்பி  இருக்கிறார்கள். இதை  யார் சொன்னது  என்று  யாருக்கும்  தெரியாது. இந்த  முசீபத்தை  நீங்குவதற்காக மாஇலை,  தட்டு, பனை ஓலை  போன்றவற்றில்  சில  வார்த்தைகளை அரபியில் எழுதி, அதை  வாங்கி  கரைத்து  குடித்தால்  அந்த  முசீபத்  நீங்கி விடும்  என்று  நம்பி  செய்து  கொண்டு  இருக்கிறார்கள்.


அன்று  மாலையில்  கடற்கரைக்கு  போவதும், கடல்  இல்லாதவர்கள் புற்களை  மிதிக்க  வேண்டும்  என்றெல்லாம்  நம்பிக்கை.


உங்கள்  அறிவை  பயன்படுத்தி  யோசித்து  பாருங்கள்.இதெல்லாம் தூய்மையான  மார்க்கத்தில்  இருக்குமா?இருக்கிறதா?


நபியாக  இருந்தாலும், நாமாக  இருந்தாலும்  துன்பத்தை  கொடுப்பதும் 
அதை  தடுப்பதும்  அல்லாஹ் ஒருவனே.நோய்  வந்தால்  மருத்துவம் 
செய்யுங்கள்  என்று  என்று  தான்  நபி {ஸல்}  அவர்கள்  கூறுகிறார்கள்.
மாஇலையில்  எழுதி  குடித்தால்  நோய் எப்படி நீங்கும்.


எனவே  ஈமானை{இதயத்தை}கிழிக்கின்ற  இத்தகைய  மூட  நம்பிக்கைகளை  விட்டொழித்து,  நேரான  பாதையில்  செல்ல அனைவருக்கும்  அல்லாஹ்  நேர்வழி  காட்டுவானாக !

                                    

13 January 2011

மூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}

 
                                                    

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}  

இறைவன் கூறுகிறான் !நான் நாடியதை தவிர வேறொன்றும் உங்களை அணுகாது ! [அல்குர்ஆன் 9:50,51] 
                                                                                       
அல்லாஹ்  விதித்ததை தவிர வேறொன்றும் எங்களை அணுகாது.
அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று நபியே!நீர் கூறும்,
இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்வின்  மீதே பரிபூரண நம்பிக்கை 
வைப்பார்கள். [அல்குர்ஆன் 9:50,51] 
மேலும்  அல்லாஹ் கூறுகிறான் !

பூமியிலோ  அல்லது  உங்கள் வாழ்விலோ நிகழ்கின்ற எந்தச் சம்பவமும்,
அதனை நாம் நிகழச் செய்வதற்கு முன்னரே{ லவ்ஹுள் மஹ்பூல்}என்ற 
பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இல்லாமல் அதை நிகழச்செய்வதில்லை.
நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

உங்களை விட்டுப் தவறிப் போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் 
இருக்கவும்,அவன் உங்களுக்கு அளித்தவற்றில் மீது நீங்கள்{அளவுக்கு மீறி}
மகிழாதிருக்கவும்.[இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்.}
கர்வம் கொண்டவர்கள்,தற்பெருமை கொண்டவர்கள் ஆகிய எவரையும் 
அல்லாஹ் நேசிப்பதில்லை.{அல்குர்ஆன் {57;22;23}

மேற்கண்ட ஆயத்கள் மூலம்  அபசகுனம் என்று ஏதும் இல்லை.நடப்பவை 
அனைத்தும் அல்லாஹ் முன்னரே ஏற்படுத்திய ஏற்பாட்டின்படியே 
நடக்கின்றன என்று அறிய முடிகிறது .

சிலபேர் பால்கிதாபு பார்க்கிறோம் என்று  கூறிக்கொண்டு
ஆடு, மாடு, மனிதர்கள், பொருட்கள் காணாமல் போனால்,வியாபாரம் ,நோய் வந்தால்,அல்லது தமது தேவைகள் நிறைவேற வேண்டி ஒருவரிடம் சென்று கேட்கிறார்கள்.

அவர் ஏதோ ஒரு புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு வந்து 
அதிலுள்ள கட்டங்களில் ஒன்றில் விரல் வைக்கச் சொல்கிறார்.அவர் எந்த கட்டத்தில் விரல் வைத்தாரோ அந்த கட்டத்திற்கு ஒரு விரிவுரை அதன் கீழே  எழுதப்பட்டிருக்கும்.அதைப்படித்து அவர் விளக்கம் அளிப்பார்.இது போன்ற  முஸ்லீம்களில் சிலர் குறிபார்கின்றனர்.இதற்கும் இஸ்லாத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை.

இது ஜோதிடம் {ஜோசியம்}போன்றதாகும்.இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

யார் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறும் தகவலை உண்மை என 
நம்புகிறாரோ,அவர் முஹம்மது {ஸல்}அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாமிய  மார்கத்தை நிராகரித்தவர் ஆவார்.அவரது நாற்பது நாட்களின் 
தொழுகைகள் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று நபி {ஸல்}அவர்கள் 
கூறினார்கள்.

ஒருவர் பயனமாகவோ அல்லது தமது தேவையின் நிமித்தமோ வீட்டை 
விட்டு புறப்படும்போது நல்ல [வாழ்த்துக்களை}வார்த்தைகளை செவியேற்றால் அதை நற்குறியாக{நற்சொல்}கருதிப் புறப்படவேண்டும்.

பூனைக் குறுக்கே வந்தாலும்,ஆந்தை அலறினலோ,விதவைப்பெண் 
முன்னால் வந்தாலோ நம் பயணத்தை நிறுத்தி,அதை நம்பினால் 
அது மூட நம்பிக்கையாகும்.

நாம் அனைவரும்  பால்கிதாபு,சோசியம்,சகுனம் என்று எதையும்
நம்பாமல்,எல்லாம் அவன் நாட்டபடிதான் நடக்கும் என்று உறுதியோட ஈமானோட அல்லாஹ்வுக்கு  இணைவைக்காமல் வாழ்வோமாக!

05 January 2011

தூக்கம் சிறிய மவ்த் {மரணம்}


அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

இறைவன்  மரணிக்காதவர்களின் உயிர்களை  தூக்கத்தில் கைப்பற்றுகிறான் என்று குர்ஆனில் [39:42] கூறப்பட்டுள்ளதே .உறங்கும் போது மனிதன் 
உயிருடன் தான் இருக்கிறான்.

அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்போதும், மரணிக்காதவற்றை
அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து 
விட்டானோ அதை {தன்னிடத்தில் }நிறுத்திக்  கொள்கிறான்.மீதிள்ளவற்றை 
ஒரு  குறிப்பிட்ட தவணை வரை{வாழ}அனுப்பி விடுகிறான்.

இஸ்லாத்தில் மட்டுமல்லாமல் எல்லா மதங்களிலும் தூக்கம் ஒரு 
சிறிய இறப்பு-என்ற நம்பிக்கை உள்ளதை காணலாம்.ஆழ்ந்து  உறங்குபவனுக்கு உலகில் நடப்பது எதுவும் தெரியாது.உயிர் மூச்சு            மட்டும்  ஓடிக் கொண்டிருக்கும்.நல்லது -கெட்டது எதுவுமே தெரியாது.
அசந்து தூங்குபவன் இறந்த சடலத்தைப் போன்ற நிலையில் இருக்கிறான்.
எனவேதான் இதனை சின்ன மவ்த்{மரணம்}எனக் கூறுவர்.

அல்லாஹ் நாடிவிட்டால் இந்த சின்ன மரணம் முடிவான மரணமாகவும் 
ஆகிவிடும்.தூங்கச் சென்றவர் எழவே இல்லை.மரணித்து விட்டார் 
என சொல்லப்படுவதை கேட்டிருக்கலாம்.மனிதன் தினந்தோறும் தனது 
கடைசி பயணமான - மரணத்தை நினைக்க வேண்டுமென்ற நிலையில் 
தான், அல்லாஹ் தூக்கம் என்கிற சிறிய மவ்த்தை தந்துள்ளான் என்பதை 
மறக்க கூடாது.எனவே நாம் தூங்குவதற்கு முன்பு ஓதுமாறு  நபி{ஸல்} அவர்கள் கற்று தந்த துஆ 

யா அல்லாஹ் உனது நினைவுடனேயே நான் தூங்குகிறேன்.உனது
நினைவுடனேயே என்னை எழுப்புவாயாக.ஒரு வேளை இந்த தூக்கத்தில் 
எனது உயிரை பறித்துவிடடால் அதற்கு கருணை செய்வாயாக.எனது 
உயிரை திருப்பி தந்து வாழ விட்டால் நல்லோர்களுடன் வாழச்செய்வாயாக!

எனவே தூக்கம் என்பது மரணமில்லை என்றாலும் மரணித்தவரின் 
நிலைமையை உணரச்செயவதே.  தூக்கம் சிறிய மவ்த் {மரணம்}