அல்லாஹ்வுடைய அடியார்களே சகோதர்களே !சகோதரிகளே !
அஸ்ஸலாமு அலைக்கு {வரஹ்}
நாமெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தொழுகின்ற தொழுகைகள்,நோன்பு,
ஜகாத்,ஹஜ் முதலான இபாதத்களின் ஒருமித்த நோக்கம் என்னவென்றால்
பாவமன்னிப்பு தேடுவதும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதுமாகும்.
நமது இபாதத்களின் வார்த்தைகளை கவனித்து பார்த்தால் இவை நன்றாக
புரியும்.நமது சிறிய பெரிய பாவங்கள் மன்னிக்கப்படவும் தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற குற்றங்குறைகளை அல்லாஹ் மன்னித்து விடவும் கேட்கக்கூடிய தவ்பா எனும் பாவமன்னிப்பு தான் நமது இபாதத்களில் அடங்கி உள்ளது.
உதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி என்னவென்று சொல்லும்போது அன்று பிறந்த பாலகனைப் போல தூயமையாகித் திரும்புவதாக நபி [ஸல்]அவர்கள் கூறுகிறார்கள்.
பாவமன்னிப்பு என்பது ஒரு முஹ்மீனைப் பொறுத்தவரை மிகமிக முக்கியமான தேவையாக இருக்கிறது.நல்லடியார்கள்,நபிமார்கள் எல்லாம் அதிகமாக பாவமன்னிப்பு தேடி இருக்கிறார்கள்.நபி [ஸல்} அவர்கள் இரவெல்லாம் நின்று இபாதத் செய்கிறார்கள்.கால்களெல்லாம் வீங்குமளவுக்கு நின்று வணக்குகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரே!உங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டதாக அல்லாஹ் வாக்களித்துள்ள பிறகும் இவ்வளவு கடினமான வணக்க வழிபாடுகளில் தாங்கள் ஈடு பட வேண்டுமா என்று ஆயிஷா{ரலி}கேட்ட போது, "ஆயிஷாவே "நான் அல்லாஹ்வுக்கு நன்றயுள்ள அடியானாக ஆக வேண்டாமா என்று நபி{ஸல்}
பதிலளித்தார்கள்.
அல்லாஹுதஆலா தனது அருள்மறை குர்ஆனில் முஹ்மீன்களின் முக்கிய பண்புகளைப்பற்றி குறிப்பிடும்போது அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று கூறுகிறான்.
மூச்சிறைக்க பாய்ந்து ஓடுகின்ற குதிரைகளை உதாரணம் சொல்லி
தனது உரிமையாளன் விரல் அசைத்ததும் பாய்ந்து சென்று எதிரிகளின் கூட்டத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தும் குதிரைகளின் நன்றயுள்ள பண்பை ஒப்பிட்டு, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான் என்று கூறுகிறான.
மனிதர்கள் தமக்களித்த ஆற்றலையும், திறமையையும்,ஆயுளையும் தவறான காரியங்களின் பக்கம் அளித்து வருகிறார்கள்.
நாளை மறுமையில் நமது உறுப்புகள் அனைத்தும் சாட்சி சொல்லும் .நாம்
மனதிற்குள் மறைத்து வைத்த இரகசியங்களும் வெளிப்படுத்தப்படும்.
அந்நாளின் கடுமையை சிந்தித்து, நம் படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியார்களாகவும்,அவனிடம் பாவமன்னிப்பு தேடக்கூடிய
பண்பாளர்களாகவும் வாழ்வோமாக!