13 January 2011

மூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}

 
                                                    

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}  

இறைவன் கூறுகிறான் !நான் நாடியதை தவிர வேறொன்றும் உங்களை அணுகாது ! [அல்குர்ஆன் 9:50,51] 
                                                                                       
அல்லாஹ்  விதித்ததை தவிர வேறொன்றும் எங்களை அணுகாது.
அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று நபியே!நீர் கூறும்,
இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்வின்  மீதே பரிபூரண நம்பிக்கை 
வைப்பார்கள். [அல்குர்ஆன் 9:50,51] 
மேலும்  அல்லாஹ் கூறுகிறான் !

பூமியிலோ  அல்லது  உங்கள் வாழ்விலோ நிகழ்கின்ற எந்தச் சம்பவமும்,
அதனை நாம் நிகழச் செய்வதற்கு முன்னரே{ லவ்ஹுள் மஹ்பூல்}என்ற 
பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இல்லாமல் அதை நிகழச்செய்வதில்லை.
நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

உங்களை விட்டுப் தவறிப் போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் 
இருக்கவும்,அவன் உங்களுக்கு அளித்தவற்றில் மீது நீங்கள்{அளவுக்கு மீறி}
மகிழாதிருக்கவும்.[இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்.}
கர்வம் கொண்டவர்கள்,தற்பெருமை கொண்டவர்கள் ஆகிய எவரையும் 
அல்லாஹ் நேசிப்பதில்லை.{அல்குர்ஆன் {57;22;23}

மேற்கண்ட ஆயத்கள் மூலம்  அபசகுனம் என்று ஏதும் இல்லை.நடப்பவை 
அனைத்தும் அல்லாஹ் முன்னரே ஏற்படுத்திய ஏற்பாட்டின்படியே 
நடக்கின்றன என்று அறிய முடிகிறது .

சிலபேர் பால்கிதாபு பார்க்கிறோம் என்று  கூறிக்கொண்டு
ஆடு, மாடு, மனிதர்கள், பொருட்கள் காணாமல் போனால்,வியாபாரம் ,நோய் வந்தால்,அல்லது தமது தேவைகள் நிறைவேற வேண்டி ஒருவரிடம் சென்று கேட்கிறார்கள்.

அவர் ஏதோ ஒரு புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு வந்து 
அதிலுள்ள கட்டங்களில் ஒன்றில் விரல் வைக்கச் சொல்கிறார்.அவர் எந்த கட்டத்தில் விரல் வைத்தாரோ அந்த கட்டத்திற்கு ஒரு விரிவுரை அதன் கீழே  எழுதப்பட்டிருக்கும்.அதைப்படித்து அவர் விளக்கம் அளிப்பார்.இது போன்ற  முஸ்லீம்களில் சிலர் குறிபார்கின்றனர்.இதற்கும் இஸ்லாத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை.

இது ஜோதிடம் {ஜோசியம்}போன்றதாகும்.இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

யார் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறும் தகவலை உண்மை என 
நம்புகிறாரோ,அவர் முஹம்மது {ஸல்}அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாமிய  மார்கத்தை நிராகரித்தவர் ஆவார்.அவரது நாற்பது நாட்களின் 
தொழுகைகள் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று நபி {ஸல்}அவர்கள் 
கூறினார்கள்.

ஒருவர் பயனமாகவோ அல்லது தமது தேவையின் நிமித்தமோ வீட்டை 
விட்டு புறப்படும்போது நல்ல [வாழ்த்துக்களை}வார்த்தைகளை செவியேற்றால் அதை நற்குறியாக{நற்சொல்}கருதிப் புறப்படவேண்டும்.

பூனைக் குறுக்கே வந்தாலும்,ஆந்தை அலறினலோ,விதவைப்பெண் 
முன்னால் வந்தாலோ நம் பயணத்தை நிறுத்தி,அதை நம்பினால் 
அது மூட நம்பிக்கையாகும்.

நாம் அனைவரும்  பால்கிதாபு,சோசியம்,சகுனம் என்று எதையும்
நம்பாமல்,எல்லாம் அவன் நாட்டபடிதான் நடக்கும் என்று உறுதியோட ஈமானோட அல்லாஹ்வுக்கு  இணைவைக்காமல் வாழ்வோமாக!

34 comments:

RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
இது போன்ற மூடநம்பிக்கைகள் நம்மவர்களிடே இருந்தும்,தற்போது அருகிவருவதும் உண்மை...

இஸ்லாம் தெளிவாக குறிசொல்வதையும் ஜோசியம் பார்ப்பதையும் வனமையாக தடைசெய்கிறது..
இவ்விரண்டின் பிரதிபலிப்பே இந்த பால் கிதாபுகள்..

தர்காக்கள் இருக்கும் காலம் வரை இதுவும் இருக்கும் என நினைக்கிறேன்.ஏனென்றால் ஏரக்குறைய தர்கா நம்பிக்கை உடையவர்களிடம் இந்த நம்பிக்கையையும் காணமுடியும்..

வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
ரஜின்

ஸாதிகா said...

சகோ ரஜின் சொல்வதை ரீப்பிட்

ஆமினா said...

சகோ ரஜின் சொன்னதை தான் நானும் ;)

மற்றவர்களை பார்த்து பழகி தெரிந்துக்கொண்ட விஷயத்தை வழக்கமாக்கிவிட்டுவிட்டார்கள். இன்னும் இத்தகைய குறி,ஜோசியம் எல்லாம் இஸ்லாமியர்களிடையே காணும் போது சங்கடமாக இருக்கு...

நல்லா சொல்லியிருக்கீங்க

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரி அவர்களுக்கு
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

அருமையான பதிவு

கண்மூடிபழக்கங்கள் மண்மூடி போகட்டும்

சகோதரன்
ஹைதர் அலி

Starjan (ஸ்டார்ஜன்) said...

கால ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம், லா தஃத்துல் கஃஹான..ஹாத மாஃபி ஸீதரோ தரீக்.

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். குறிக்கேட்பதற்காக குறிகாரனிடம் செல்லாதீர்கள். அது உங்களை நேரான வழியில் செலுத்தாது.

ஆயிஷா அபுல். said...

//RAZIN ABDUL RAHMAN கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும்

வாங்க சகோ!

வ அழைக்கும் சலாம்

//தர்காக்கள் இருக்கும் காலம் வரை இதுவும் இருக்கும் என நினைக்கிறேன்.ஏனென்றால் ஏரக்குறைய தர்கா நம்பிக்கை உடையவர்களிடம் இந்த நம்பிக்கையையும் காணமுடியும்..//

உண்மை தான் சகோ.

உங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும்
ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//ஸாதிகா கூறியது...

சகோ ரஜின் சொல்வதை ரீப்பிட்//


நன்றி ஸாதிகா.

ஆயிஷா அபுல். said...

ஆமினா கூறியது...

சகோ ரஜின் சொன்னதை தான்

மற்றவர்களை பார்த்து பழகி தெரிந்துக்கொண்ட விஷயத்தை வழக்கமாக்கிவிட்டுவிட்டார்கள். இன்னும் இத்தகைய குறி,ஜோசியம் எல்லாம் இஸ்லாமியர்களிடையே காணும் போது சங்கடமாக இருக்கு...

நல்லா சொல்லியிருக்கீங்க//


ஆமினா!உங்கள் கருத்துக்கு
ரெம்ப நன்றி.

ஆயிஷா அபுல். said...

//ஹைதர் அலி கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரி அவர்களுக்கு மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

அருமையான பதிவு

கண்மூடிபழக்கங்கள் மண்மூடி போகட்டும்

சகோதரன்
ஹைதர் அலி//


வ அழைக்கும் சலாம்{வரஹ்}


உங்கள் வருகைக்கு ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

கால ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம், லா தஃத்துல் கஃஹான..ஹாத மாஃபி ஸீதரோ தரீக்.

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். குறிக்கேட்பதற்காக குறிகாரனிடம் செல்லாதீர்கள். அது உங்களை நேரான வழியில் செலுத்தாது.//


உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி'

அந்நியன் 2 said...

உங்கள் பதிவு நிச்சயம் எல்லா மக்கள்களுக்கும் ஒரு விழிப்புணர்வா இருக்கும் நன்றி சகோ.......

இந்த குறி பார்ப்பது நல்ல நேரம் பார்ப்பது எல்லாம் நமது நாட்டின் கலாச்சாரம்,நாமும் அந்த கலாச்சாரத்தின் வழியில் பிறந்தவர்கள்தான்,நமது முன்னோர்களின் நர்பாக்கியத்தால் நாம் இஸ்லாமியர்களாக மாறியுள்ளோம் அல்ஹம்ந்து லில்லாஹ்.என்று நாம் இஸ்லாத்தில் இனைந்து விட்டமோ அன்றே நாம் தீனுல் இஸ்லாம் வழியில் பின்பற்றி நடக்கணும் அதுதான் ஒரு இஸ்லாமியனுக்கு அழகு ஆனால் நாம் இன்று இஸ்லாமியன் என்ற பேரில் அதிகமான சீரழிவுக்கான வழியினை பின் பற்றி மாற்று மதத்தினர் பயந்து மிரளும் அளவிற்கு கல்யாண செலவுகளும் வீடு அலங்கார செலவுகளும் மற்றும் சிர்க்கிர்க்கான வழிபாடுகளும் நமது சமுதாய மக்கள்களிடம் பரவிக் கிடப்பதை எண்ணி வேதனைப் படுகிறேன்.

இந்த பஞ்ச பரதேசிகலனா லப்பை மார்களும் வயிற்ருப் பிழைப்பிற்க்காக இஸ்லாத்தை அடகு வைத்து பிழைக்கும் நாதாரி மவ்லவிகளும் ஒழிந்தால்தான் உண்மையான முஸ்லிம்கள் இந்த உலகில் தலை நிமிர்ந்து நடக்கமுடியும்.
நான் ஊரில் இருக்கும்போது ஒரு மவ்லவியை சும்மா தமாசுக்காக பாத்திக ஓத கூப்பிட்டு பகல் சாப்பாட்டிற்கும் வரவழைத்தேன்,மனுசர் லுகர் தொழுகையை அவசரமாக முடித்துவிட்டு ஒரு டிபன் பாக்ஸோடு வீட்டில் ஆஜர்,வாங்க அஸ்ரத்து இன்னும் கறியே அடுப்பில் இருந்து இறக்களே அதுக்குள்ளே வந்து விட்டிர்களே என்று,ஆதுக்கு அது சொல்லுச்சு இல்லை தம்பி இன்னைக்கு நான் வெளியூர் போக இருப்பதால் நேரத்தோடு சாப்பிட்டு விட்டு போகலாம்னு வந்தேன்,அப்படி நேரமாச்சுனா இந்த டிபன் பாக்ஸில் சாப்பாட்டை போட்டு வீட்டிற்கு கொடுத்து விடுங்கள் இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்றார்.

பாத்தியளா மௌலவிகளின் கூத்தை ?
இவர் செய்யும் கெட்ட விசயத்தினால் நல்ல மவுலவிகளுக்கும் கெட்டப் பெயர்கள் வருகிறது,சரிஎன்று டிபனை வாங்கி விட்டு அவர் போனப் பின்னாடி வெறும் ரசத்தையும் கொஞ்சகாணு சோருவையும் போட்டு ஆலிம்ஷா வீட்டிற்கு அனுப்பி விட்டேன் அரை மணி நேரம் கழிச்சு வீட்டிற்கு போன் வருது தம்பி இப்படி செய்யலாமா என்று ?

வேறே எப்படி செய்யுறது என்று சிரித்து விட்டு சும்மா விளையாட்டுக்குத்தான் உங்களை வீட்டிற்கு கூப்பிட்டேன் நான் நாலு ஆலிம்ஷாக்களை கூப்பிட்டேன் அவர்களுக்கு என்னைப் பற்றி தெரிஞ்சதுனாலே யாருமே வீட்டிற்கு வரவில்லை நீங்கள்தான் மாட்டினிர்கள் என்று சொல்லிவிட்டு உண்மையான மார்க்கம் கத்தம் ஓத சொல்லுகிறதா என்று கேட்டேன் லைன்..கட்.

நல்லொதொரு பதிவு சகோ வாழ்த்துக்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஆயிஷாஅபுல்.

மாஷாஅல்லாஹ்.
மிக அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம்.சகோ அன்னியன் அவர்கள்,ஒரு மௌலவியை அவமானப்படுத்திய சம்பவம் குறித்து நகைச்சுவையாக சொன்னது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மௌலவிகளின் செயல்பாடுகள் தவறுதான்.இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றுதான்.

ஆனால் சகோ அன்னியன் அவரிடம் நடந்துகொண்டவிதம் என்ன இஸ்லாமிய முறையா.???

விருந்தினரை உபசரிப்பதைக்குறித்தும்,கண்ணியப்படுத்துவது குறித்தும் இஸ்லாம் அறிவுறுத்தியதை அவர் அறியவில்லையா?

ஒரு மௌலவிக்கு மார்க்கத்தை உணர்த்த இவர் மார்க்கவிதிகளை அணுகினாரா?...இல்லையே..

ஊரில் ஒரு சொல்வழக்கு உண்டு."பிரியாணி கொடுத்து செருப்பால் அடித்து அனுப்புவது என்று."

அதை அப்படியே செய்துவிட்டார்,செருப்பை கையில் எடுக்காமல்..

இஸ்லாம் கண்ணியத்தை கற்றுத்தருகிறது.அவருக்கு கண்ணியமான முறையில் அவர் எடுத்து சொல்லி இருக்கலாமே..

அவரது கருத்துரையை படிக்கவே வேதனையாக இருக்கிறது.

அன்புடன்
ரஜின்

ஆயிஷா அபுல். said...

//அந்நியன் 2 கூறியது...

உங்கள் பதிவு நிச்சயம் எல்லா மக்கள்களுக்கும் ஒரு விழிப்புணர்வா இருக்கும் நன்றி சகோ...//

வாங்க சகோ !
உங்கள கருத்துக்கு நன்றி.


//இந்த குறி பார்ப்பது நல்ல நேரம் பார்ப்பது எல்லாம் நமது நாட்டின் கலாச்சாரம்,நாமும் அந்த கலாச்சாரத்தின் வழியில் பிறந்தவர்கள்தான்,நமது முன்னோர்களின் நர்பாக்கியத்தால் நாம் இஸ்லாமியர்களாக மாறியுள்ளோம்//

பெரியோர்கள்,முன்னோர்கள் இப்படிதான்
கூறினார்கள் என்று அதன் அடிப்படையில்
தங்கள் வணக்கங்களை அமைத்து கொண்டோம்.
அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியில் நமது
வணக்கம் அமைந்துள்ளதா?என்று சிந்திக்கவில்லை.

இது அவர்கள் செய்த குற்றமில்லை.கடமைப்பட்டுள்ள
மார்க்க அறிஞர்கள் செய்த தவறு.உதாரணத்திற்கு
உங்கள் வீட்டுக்கு வந்த லெப்பை.

இன்று திருகுர்ஆன் வழியில் இப்படிதான் வாழனும்
என்று சொன்ன சகோதரரை போல்,அன்று மார்க்க அறிஞர்கள்
யாரவது சொல்லி இருந்தால்,இன்று தர்காக்கள்,ஜாதகம்,சகுனம்
என்று மூடநம்பிக்கை எதுவும் இருந்திருக்காது.

இன்று நாம் முயற்றி செய்தால்,இனி வரும் காலங்களில்
மூடநம்பிக்கை ஒளிந்து விடும்.{இறைவன் நாடுவானாக}

சகோ சின்ன வருத்தம் லெப்பை
தூககை தூக்கி வந்ததற்காக கொஞ்சம்
கறி,சோறு கொடுத்து இருக்கலாம்.

"பசித்தோருக்கு உணவளிங்கள் என்று இறைவன்
கூறுகிறான் அதற்காக"

நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//முஹம்மத் ஆஷிக் கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஆயிஷாஅபுல்.
மாஷாஅல்லாஹ்.
மிக அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு.

வ அழைக்கும் சலாம்{வரஹ்}

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

/RAZIN ABDUL RAHMAN கூறியது..


மீண்டும் தெளிவாக பின்னூட்டம் அளித்ததற்கு ரெம்ப நன்றி சகோ.

அந்நியன் 2 said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் (ரஹ்) சகோ..ரஜின் நான் இமாமை மதிப்பவன்,பசித்து வரும் ஏழை எழியோர்களை நினைத்து வேதனைப் படுபவன்,என்னால் முயன்ற அளவிற்கு பிறருக்கு உதவி செய்திடணும் என்பதுதான் எனது கொள்கை இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை இது வரைக்கும் நான் யாருக்கும் பெரிய அளவில் உதவியும் செய்திட வில்லை,பசியின் கொடுமை என்னவென்று எனக்கு தெரியும் நானும் ஒரு வேலை உணவையே ஒரு நாளைக்கு உட்க்கொண்டு வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த ஏழைதான் நான்,அல்ஹம்ந்துலில்லாஹ் அல்லாஹ் இன்றைக்கு மூன்று வேலை உணவினை உட்க்கொள்வதர்க்கு வசதியினை தந்ததிற்கு முதல் நன்றியை அவனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஊரில் மட்டுமில்லாது எனது மாவட்டத்திலும் மவ்லவிகள் செய்யும் தவறான கொள்கையினால் நல்ல மவ்லவிகளின் பெயர்கள் கெட்டுப் போகின்றன பாமர மக்கள்களும் தவறான வழியில் செல்லுகிறார்கள் நான் அழைத்த ஆலிம்ஷா பகலில் தொழுகை வைத்து விட்டு இரவில் தர்காவில் பாத்திகா ஓதி வயிற்றைக் கழுவுகிறார் இப்படிப்பட்டவரைத்தான் நான் சீண்டினேன் எனது ஊருக்கு சத்திய மார்க்கத்தை போதிக்க வந்த இமாம் அவர்கள் மூன்று வாரம் கூட முழுமையாக மக்கள்களிடம் கருத்தை எத்தி வைக்க முடியவில்லை காரணம் இவர் தவ்கித் ஜமாஅத் என்றும் நஜாத் என்றும் ஓரம் கட்டப் பட்டு இடம் மாற்றமும் செய்யப் பட்டார்.

இப்பொழுது எனது ஊரில் மூன்று பள்ளிகளிலும் சுயநலத்திற்காக மார்க்கத்தை அடகு வைத்து பிழைக்கும் இமாம்கள்தான் இருக்கிறார்கள் அவர்களைத்தான் சீண்டினேன் நான் மட்டும் இல்லை என்னைப் போல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இந்த வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதனால் எங்கள் மனது மகிழ்ச்சி அடைகிறது நான் இப்பொழுது எழுதியது ஒரு சின்னப் பிட்டுதான்,எழுத ஆரம்பித்தால் நீங்களும் வாய் விட்டு சிரிப்பிர்கள்.
அல்லாஹ் மீது ஆணையாக சொல்லுகிறேன் பிறரின் துன்பத்தில் பங்கு கொள்வதுதான் எனது கொள்கை.பசித்தவரும விருந்தினருக்கும் ஏழை எளியோருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வழியில் விருந்தளிப்பேன்.உயிர் உள்ளவரை.

தூயவனின் அடிமை said...

இணைவைத்தல் (ஷிர்க்) பெரிய பாவம் என்று இறைவன் திருமறையில் விளக்கமாக கூறி உள்ளான். மறைவானவற்றை அறிய கூடிய தகுதி இவருக்கு மட்டும் எப்படி கிடைக்கும்? இந்த கூட்டம் ஏன் சிந்திக்க மறுகின்றது?, எல்லாம் சுயநலம்.

ஆயிஷா அபுல். said...

//இளம் தூயவன் கூறியது...

இணைவைத்தல் (ஷிர்க்) பெரிய பாவம் என்று இறைவன் திருமறையில் விளக்கமாக கூறி உள்ளான். மறைவானவற்றை அறிய கூடிய தகுதி இவருக்கு மட்டும் எப்படி கிடைக்கும்? இந்த கூட்டம் ஏன் சிந்திக்க மறுகின்றது?, எல்லாம் சுயநலம்.//


நல்ல பின்னூட்டம் சகோ, நன்றி

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.நல்லதொரு பதிவு

மனிதம் நன்றிகெட்டவனாக இருக்கிறான் படைத்தவனை மறந்துவிட்டு படைக்கப்பட்டவர்[வை]களிடம் உதவி தேடுகிறான்.

இவ்வாறான தீமைகளிருந்து நம்மை காப்பாற்றவேண்டும் இறைவன்..

ஆயிஷா அபுல். said...

//அன்புடன் மலிக்கா கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.நல்லதொரு பதிவு

மனிதம் நன்றி கெட்டவனாக
இருக்கிறான் படைத்தவனை மறந்து விட்டுபடைக்கப்பட்டவர்[வை]களிடம் உதவி தேடுகிறான்.

இவ்வாறான தீமைகளிருந்து நம்மை காப்பாற்றவேண்டும் இறைவன்..//

வாங்க தோழி !

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும

ரெம்ப நன்றி.

ரஹீம் கஸ்ஸாலி said...

யார் ஒருவர் ஜாதகம், ஜோதிடம் பார்த்து அதை உண்மையென நம்புகிறார்களோ அவர்கள், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுக்க பட்ட குர்ஆனை நிராகரித்து விட்டார்கள் என்பது இறை வசனம். உங்கள் பதிவு சரியான சாட்டையடி

ரஹீம் கஸ்ஸாலி said...

பால் கிதாபு தாயத்து, தட்டு தகடு இன்னபிற அனாச்சாரங்களின் பிறப்பிடம் மார்கத்தை தவறான வழியில் சொல்லி வயிறு வளர்க்கும் வழி கேட்டிலிருக்கும் மவ்லவிமார்களும், தர்காக்க்களும்தான்.

ரஹீம் கஸ்ஸாலி said...

இனி வரும் பதிவுகளில் இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தின் பெயரில் இன்று பரவிக்கிடக்கும் பித்அத் களை தோலுரித்து காட்டுங்கள் சகோதரரே.....

ஆயிஷா அபுல். said...

//ரஹீம் கஸாலி கூறியது...

யார் ஒருவர் ஜாதகம், ஜோதிடம் பார்த்து அதை உண்மையென நம்புகிறார்களோ அவர்கள், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுக்க பட்ட குர்ஆனை நிராகரித்து விட்டார்கள் என்பது இறை வசனம். உங்கள் பதிவு சரியான சாட்டையடி//

உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்
ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஆயிஷா அபுல். said...

//ரஹீம் கஸாலி கூறியது...

பால் கிதாபு தாயத்து, தட்டு தகடு இன்னபிற அனாச்சாரங்களின் பிறப்பிடம் மார்கத்தை தவறான வழியில் சொல்லி வயிறு வளர்க்கும் வழி கேட்டிலிருக்கும் மவ்லவிமார்களும், தர்காக்க்களும்தான்.//


உண்மை தான் சகோ.

ஆயிஷா அபுல். said...

//ரஹீம் கஸாலி கூறியது...

இனி வரும் பதிவுகளில் இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தின் பெயரில் இன்று பரவிக்கிடக்கும் பித்அத் களை தோலுரித்து காட்டுங்கள் சகோதரரே.....//


எழுதுகிறேன் சகோ.நன்றி

FARHAN said...

அருமையான பதிவு மூடனன்பிக்கைகள் பரவி கிடக்கும் இண்ட சமுதாயத்தில் இப்படி பட்ட விளிபுனர்வு பதிவுகள் அவசியம்தொடர்ந்து எழுதுங்கள்

FARHAN said...

அருமையான பதிவு மூடனன்பிக்கைகள் பரவி கிடக்கும் இண்ட சமுதாயத்தில் இப்படி பட்ட விளிபுனர்வு பதிவுகள் அவசியம்தொடர்ந்து எழுதுங்கள்

ஆயிஷா அபுல். said...

//FARHAN கூறியது...//

உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

mohamedali jinnah said...

Assalamuallikum
I have given Link to your site in
http://seasonsali.com/
Please visit and see
LINK 5(Tamil)இனிய வசந்தம்
Wassalam.

ஆயிஷா அபுல். said...

//Assalamuallikum
I have given Link to your site in
http://seasonsali.com/
Please visit and see
LINK 5(Tamil)இனிய வசந்தம்
Wassalam.//


வ அழைக்கும் சலாம்

அந்த லிங்க் பார்த்தேன்.என் பிளாக்
இணைத்ததற்கு ரெம்ப நன்றி.
அதில் சின்ன சின்ன ஆசை அபுல்பசர் {abulbazar.blogspot.com}
என் கணவர் பிளாக் தான்.அதையும் இணைத்ததற்கு
எங்கள் இருவர் சார்பாகவும் நன்றியை தெரிவித்து
கொள்கிறேன்.

suvanappiriyan said...

சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்!

The Tamil Language said...

ARUMAI

Post a Comment