02 December 2011

நாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...

அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
                                                                             
1......அல்லாஹ்வின்  மீது  நம்பிக்கை

2......வானவர்கள்  {மலக்குகள்}  மீது   நம்பிக்கை
          
3..... இறைவேதங்கள்   மீது   நம்பிக்கை                
         
4..... இறைதூதர்கள்    மீது  நம்பிக்கை 

5....  மறுமையின்  மீது  நம்பிக்கை 

6..... விதியின்  மீது  நம்பிக்கை 

1... அல்லாஹ்வை  நம்புவது....
                 
அல்லாஹ்  ஆதியிலிருந்து  தொடர்ந்து  இருந்து  வருகின்றான். விண்ணையும்,
மண்ணையும், அகிலங்கள்  அனைத்தையுமே  படைத்து,  தன்னந்தனியாக
நிர்வகிப்பவனாக  இருக்கின்றான். இவற்றைப்  படைபபதிலோ , நிர்வகிப்பதிலோ  அவனுக்குத்  துணையாக,  இணையாக  யாரும் இல்லை என 
உறுதி   கூறுதல் ;  அத்துடன்  அவன்   எவ்விதமான  மாசு  மருவுமற்றவன் ;
அவன்  தூய்மையானவன் ; இன்னும்  அவனே  எல்லாவித  நற்பண்புகளுக்கும்,
நிறைகுணங்களுக்கும்  உரிமையாளனாகவும்,  ஊற்றுக்கண்ணாகவும்  திகழ்கின்றான்  என்று  ஏற்றுக்  கொள்வதும்  ஆகும்.

2.....மலக்குகளை  நம்புவது....

மலக்குகள்  ஒளியால்  படைக்கப்பட்டவர்கள்.  இறைவனுக்கு  மாறு  செய்வதில்லை. எந்நேரமும்   அல்லாஹ்விற்கு   வணக்கம்   புரிவதிலும்  கீழ்ப்படிவதிலும்   ஈடுபட்டிருக்கின்றார்கள். வாய்மையான   பணியாளனைப் போன்று, அதிபதியின்  ஒவ்வொரு  கட்டளையும்  நிறைவேற்ற  அவன்  திருமுன்  கை  கட்டி  காத்து  நிற்கிறார்கள். உலகில்  நற்செய்தி  புரிபவர்களுக்காக  பிரார்த்தனை  செய்கின்றார்கள் என்று  உறுதியாக  நம்புவதாகும்.

3....இறைவேதத்தை   நம்புவது ...

தூயவனான  அல்லாஹ்   தன்   திருத்தூதர்கள்  வாயிலாக  அவ்வப்போது  இறக்கியருளிய  வழிகாட்டும்  வேதங்கள்  அனைத்தையும்  உண்மையானவை
என  ஏற்றுக்  கொள்வதாகும். அவற்றில்  இறுதியானது  திருக்குர்ஆன்  ஆகும். அல்லாஹ்  இந்த  வேதத்தை  அண்ணல்  நபி [ஸல்} அவர்களின்  வாயிலாக  அனுப்பினான். அது  தெளிவான  தூய  வேதமாகத்   திகழ்கிறது. அதில்  எந்தவித  குறைப்பாடும்  இல்லை. மேலும்  அது  எல்லாவிதக்  சீர்கேட்டை  விட்டும்  பாதுகாப்பாய்  உள்ளது. எனவே  இறைவனின்  பால்  கொண்டு  சென்று  சேர்க்கக்  கூடிய  வேதநூல்.  இதனைத்  தவிர  வேறு  எதுவும்  இப்போது  உலகில்  இல்லை.

4.  இறைத்தூதர்களை  நம்புவது .

இறைவன்  தரப்பிலிருந்து  வந்த   இறைத்தூதர்கள்  அனைவருமே  உண்மையாளர்கள்  ஆவர்.  அந்த  இறைத்தூதர்கள்  அனைவருமே இறைவனின்  செய்திகளை  கூடுதல்  குறைவு  ஏதுமின்றி  மக்களிடம்  சேர்த்தார்கள். இறுதியாக  அனுப்பப்பட்ட  இறைத்தூதர்  முஹம்மத் {ஸல்}
அவர்கள்.  இனி மனிதர்களின்  ஈடேற்றம்  அண்ணலாரின்  வழிமுறையைப்  பின்பற்றுவதிலேயே  அடங்கியிருக்கிறது.

5....  மறுமையின்  மீது  நம்பிக்கை.

அல்லாஹ்   அனைத்திற்குமே   ஒரு முடிவு  காலத்தை  நிர்ணயித்துள்ளான்.
இந்த  உலகத்திற்கும்  ஒரு  முடிவு  உண்டு.  இறந்துவிட்ட   அனைவரையும்  அதற்குப்பின்   அவர்களுடைய   அடக்கத்தலங்களை  விட்டு  எழுப்புவான். அப்போது  ஒவ்வொருவரிடமும்  அவர்கள்  இந்த  உலகில்  செய்த  செயல்களைப்   பற்றி  விசாரணை  செய்வான்.  அந்த  நாளில்  நன்மைக்கும், தீமைக்கும்  தகுந்த  கூலி  கொடுப்பான். ஒவ்வொருவருக்கும்  நீதி  வழங்குவான். இவ்வாறு  இறுதி நாளை  நம்பிக்கை  கொள்ள வேண்டும்.

6..... விதியின்  மீது  நம்பிக்கை...

உலகில்  நடந்து  கொண்டிருப்பவை  அனைத்தும்  இறைவனின்  கட்டளையினால்தான்  நடந்து  கொண்டிருக்கின்றன. இங்கு  அவனுடைய  கட்டளை  மட்டுமே  செயல்படுகிறது. அவன்  விரும்புவது  ஒன்று, உலகம்  செயல்படும்   விதம்  வேறொன்று  எனும்  நிலை  கிடையாது. ஒவ்வொரு  நன்மைக்கும், தீமைக்கும் , நேர்வழிக்கும், வழிகேட்டிற்கும்  நியதி  ஒன்று  உண்டு,  அதனை  அவன்  ஆதியிலேயே  நிர்ணயித்து  விட்டான். இறைவனுக்கு  நன்றி  செலுத்தும்  நல்லடியார்கள்  மீது வருகின்ற  துன்பங்கள்,அவர்கள்  அனுபவிக்கும்  இன்னல்கள், அவர்களுக்கு  நேரிடும்  சோதனைகள்- இவையனைத்தும்  அவர்களுடைய  இறைவனின்  கட்டளைப்படி  முன்பே  அவன்  நிர்ணயித்து  நியதிகள், விதிகளின்படிதான்  நேருகின்றன.

  உங்கள்  சகோதரி

12 comments:

Unknown said...

ஸலாம்
பரிந்துரை செய்யுங்கள் .....
இணையத்தில் நல்ல ஒரு பணி ...

ஸாதிகா said...

சலாம் ஆயிஷா.அறிந்தவை ஆனாலும் சொன்ன விதம் அருமை.

அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

ஜசாக்கல்லாஹ் ஹைர் ! சிறந்த தொகுப்பு !

" நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அலைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றிப் பெற்றோர்" -{3:104}

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

ஆயிஷா அபுல். said...

//நல்ல ப்ளாக்கரை ஆதரிப்பவன் சொன்னது…

ஸலாம்
பரிந்துரை செய்யுங்கள் .....
இணையத்தில் நல்ல ஒரு பணி ...//

வ அலைக்கும் சலாம்

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

ஆயிஷா அபுல். said...

//ஸாதிகா சொன்னது…

சலாம் ஆயிஷா.அறிந்தவை ஆனாலும் சொன்ன விதம் அருமை.//

வ அலைக்கும் சலாம்

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

ஆயிஷா அபுல். said...

//அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

ஜசாக்கல்லாஹ் ஹைர் ! சிறந்த தொகுப்பு !//

வ அலைக்கும் சலாம்

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

//நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அலைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றிப் பெற்றோர்" -{3:104}//

இறைவன் நம் அனைவரையும் நல் வழியில் வெற்றி பெற்றோராய் ஆக்குவானாக ...ஆமீன்...

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பதிவுகள் நன்றாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1),இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.......

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

நல்லதொரு பதிவு சகோதரி.தங்கள் இறைப்பணி இறையருளால் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.

ஆயிஷா அபுல். said...

//திருவாளப்புத்தூர் முஸ்லீம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,//

வ அலைக்கும் சலாம்

//பதிவுகள் நன்றாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்...//துஆ செய்யுங்கள் சகோ

உங்கள் தளத்தையும் அறிமுகம் செய்கிறேன்

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//Ayushabegum சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

நல்லதொரு பதிவு சகோதரி.தங்கள் இறைப்பணி இறையருளால் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.//

வ அலைக்கும் சலாம் வரஹ்...

என் இறைப்பணி இறையருளால் மென்மேலும் சிறக்க துஆ செய்யுங்கள் சகோதரி.

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

Post a Comment