அஸ்ஸலாமு அழைக்கும்{வரஹ்}
மஸ்ஜித்!
அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய "ஹய்யாலல் பலா(ஹ்)" என்று அகிலத்தாரை அழைப்பது தான் அல்லாஹ்வின் இல்லங்கள் எனப்படும் மஸ்ஜிதுகளின் தலையாயப் பணி. மஸ்ஜித் என்பன பொதுவாக வணக்கஸ்தலமாக இருந்தாலும் ஸஜ்தா செய்யும் இடம் என்றும் அரபியில் சொல்லபடுகிறது.
மஸ்ஜித் ஒரு வரலாற்று பார்வை
உலகில் முதன்முதலில் கட்டப்பட்ட மஸ்ஜித் 'கஃபதுல்லாஹ்' எனக்குர்ஆன் சான்று பகிர்கிறது.காபா முதலில் ஆதிமனிதரும் முதல் நபியுமாகிய ஆதம் (அலை) அவர்களால் இறையோனை முறையாக வணங்கும் வழிப்பாட்டுதலமாக துவங்கப்பட்டது..,பிறகு நபி இப்ராஹீம்(அலை) அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.
அதற்கு பிறகு இரண்டாவதாக,40 வருடங்களுக்கு பின் மஸ்ஜித் அக்ஸா ஆதம் நபி அவர்களால் கட்டப்பட்டது.மூன்றாவதாக இஸ்லாமிய வரலாற்றில் பெருமானார்[ஸல்]அவர்களின் கரங்களால் கட்டப்பட்ட பள்ளி மஸ்ஜித் குபா ஆகும்.இது மதினாவிற்கு அருகில் உள்ளது.
நான்காவதாக மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி கட்டப்பட்டது, இதற்கு நபியின் பள்ளி என்ற சிறப்பும் உண்டு.இவைகளே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாயில்கள் பின்பு உலகம் முழுவதும் பல்லாயிரம் மஸ்ஜிதுகள் கட்டப்பட்டன.கட்டப்பட்டுக் கொண் டிருக்கின்றன.
மஸ்ஜித் கட்டுவதின் சிறப்பும், பயன்பாடும்
ஒருவர் இவ்வுலகில் ஒரு மஸ்ஜித் கட்டினால் அல்லாஹ் அவருக்கு
பள்ளிக்குள் நுழையும்போது ஓதும் துஆ! வலது காலை முனவைத்து
சுவர்க்கத்தில் மாளிகையை தருவான். (திர்மிதி, ஹாகிம்.) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுகளை கட்டுவதன் சிறப்பை இவ்வாறு கூறுகிறார்கள்
நபிகளார் காலந்தொட்டே மஸ்ஜிதுகள் கடமைக்காக தினம் சென்றும் வரும் ஒரு இடமாக மட்டும் பயன்படுத்தப்படாமல் சமுகரீதியான செயல்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டே வந்தன உதாரணமாக,மக்களை ஒன்று சேர்க்கும் மையங்களாக, சமுதாய ஒற்றுமைகளை பெரிதும் ஏற்படுத்தியும், .ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொள்ளவும், உதவிகள் செய்து கொள்ளவும்,ஒரு களமாக மஸ்ஜிதுகள் பயன்படுத்தப்பட்டன மேலும் மஸ்ஜிதுகள் தொழுகையில் ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இஸ்லாத்தின் உயர்ந்த இலட்சியத்தை இன்றும் உலகறிய செய்கிறது.
எனவே தான் மஸ்ஜிதுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த நபிகள் நாயகம்[ஸல்]அவர்கள் தனித்து தொழுவதை விட பள்ளிக்கு சென்று கூட்டாக (ஜமாத்துடன் சேர்ந்து) தொழுவதை ஊக்குவித்தார்கள் என்பதைவிட கட்டாயப்படுத்தினார்கள் என்றாலும் மிகையாகாது. தனியாக தொழுதால் ஏற்படும் நன்மையை விட பள்ளியில் ஜமாத்துடன் சேர்ந்து தொழுதால் இருபத்தைந்து மடங்கு நன்மைகள் கூடுதலாக கிடைக்கும் என்று மக்கள் மஸ்ஜிதுகளின் பால் செல்வதற்கு ஆர்வமூட்டினார்கள்.
அத்தகைய மேன்மை தங்கிய மஸ்ஜிதுக்குள் அல்லாஹ்வை தொழ அன்றாடம் செல்லும் நம்மில் பலர் பள்ளிவாயிலுக்குண்டான துவாவை சொல்ல மறப்பது வருத்தமான விஷயமே., பெருமானார் அவர்கள்பள்ளிக்குள் நுழையும்போது ஓதும் துஆ! வலது காலை முனவைத்து
அல்லாஹும்ம இப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக
[பொருள்]இறைவனே உன் பேரருளின் வாயிலை திறந்து வை என்றும். அதுப்போல பள்ளியை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ!
அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க மின் வரஹ்மத்திக
[பொருள்]இறைவனே! நான் உன் அருட் கொடையையும்,கிருபையையும்
தேடுகிறேன் என்ற சங்கைமிகுந்த துஆவையும் கற்றுக்கொடுத்தார்கள்
இவ்விடத்தில் முஸ்ஸ்லிம்களாகிய நாம் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும்
"நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)
என்ற மறை சொல்லுகிணங்க அல்லாஹ் அல்லாத யாரையும் புகழவோ, பெருமைப்படுத்தவோ மஸ்ஜிதுகளை பயன்படுத்தக்ககூடாது.
மேலும் பள்ளிவாயிலுக்கு தொழ செல்லும் போது சுத்தமான ஆடைகளையே அணிந்து செல்லவும் வேண்டும் ஏனெனில்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்;(7:31)
என்று வல்லோன் அழகிய கட்டளையும் பிறப்பித்திருக்கிறான்.
அவன் கூறிய வழி நின்று அவனை நாளும் வணங்க அருள்புரிவானாக!
16 comments:
gud article... carry on...
மஸ்ஜித் வணக்கத் தலமாக மட்டுமல்லாமல், சமூக ஒற்றுமைமைக்கான ஒரு களமாகவும்
திகழும் மகத்தான உண்மையை அறியும் போது சமுதாய மேம்பாட்டின் மீது இஸ்லாம்
கொண்டிருக்கும் அக்கறை புலனாகிறது.
அருமையான பதிவினைத் தந்த வலைப் பதிவருக்கு வாழ்த்துக்கள் .
முதன் முறை தங்கள் பதிவுகளை பார்க்கிறேன். இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நன்றி ஆயிஷா! இன்று முதல் தங்களை Follow செய்பவர்கள் பட்டியலில் நான் இணைவதில் மகிழ்ச்சி! நான் எழுதிக்கிழிக்கும் இடங்கள் madrasbhavan.blogspot.com & nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பார்க்க. பிடிக்காவிட்டால் திட்டித்தீர்க்க.
நல்லதொரு பதிவை பதிந்து அதில் சிறப்பான ஹதீஸ்களையும் தொகுத்து நாங்கள் எழிதில் புரிந்து கொள்ளும்படி மிகத்தெளிவாக தொகுத்தமைக்கு நன்றிகள்.
நீண்ட காலத்திற்கு பிறகு பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.
Mohamed Faaique சொன்னது…
gud article... carry on...
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
நிஷாந்தன்!
உங்கள் வருகைக்கும்,தெளிவான கருத்துக்கும் நன்றி.
சிவகுமார்!
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
இஸ்லாத்தை பற்றி இன்னும் நிறைய நீங்கள்
தெரிந்து கொல்லனும்.
பாலோயர்ஸ் இணைந்ததற்கு நன்றி.
உங்கள் பதிவை எட்டி பார்த்தேன்.
அந்நியன்!
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
கொஞ்சநாள் பதிவிற்கு லீவு.
வாழ்த்துக்கு நன்றி.
சகோதரி,மஸ்ஜித் என்பது என்ன, என்பதை அனைத்து சமுதாய மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள். .
இளம் தூயவன்
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ அவர்களுக்கு
அறிவிப்பாளர்: அம்ருபின் அவ்ஃப் (ரலி)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்
இஸ்லாமிய மார்க்கம் தொடக்கத்தில் மக்களுக்கு அந்நியமானதாக இருந்தது,விரைவில் இது முன்போலவே அந்நியமானதாகிவிடும்;
எனவே அந்நியமானவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
இவர்கள் எனக்குப் பின்னால் மக்கள் சீர்குலைத்துவிட்ட என் வழிமுறைகளை உயிர்ப்பிப்பதற்காக எழக்கூடியவர்கள் ஆவார்கள்.
(நூல்:மிஷ்காத்)
நபியவர்கள் முன்னறிப்பு செய்த கூட்டத்தில் நீங்களும் உங்களுடைய பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்
அல்ஹம்துலில்ல்லாஹ்
தொடர்ந்து நேர்வழி செல்ல அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக
சகோதரன்
ஹைதர் அலி
வ அழைக்கும் சலாம்{வரஹ்}
//நபியவர்கள் முன்னறிப்பு செய்த கூட்டத்தில் நீங்களும் உங்களுடைய பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்
அல்ஹம்துலில்ல்லாஹ்
தொடர்ந்து நேர்வழி செல்ல அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக//
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.
ஆயிஷா,மஸ்ஜிதைப்பற்றி உங்கள் இடுகை மூலம் மேலதிகதகவல்கள் அறிந்து கொண்டேன்.நன்றி.சிறக்கட்டும் உங்கள் “தீன்”பணி
parattugal
அஸ்ஸலாமு அழைக்கும்
ஷாதிகா!உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி,
polurdhayanithi சொன்னது…
parattugal
உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்
நன்றி,
Post a Comment