21 August 2010

துஆக்களின் சிறப்பு ,

அஸ்ஸலாமு  அழைக்கும்.
                 இறைவனிடம்   கை   ஏந்துங்கள்,                                                              
      நாம்  இறைவனின்  தியானத்தை  தவிர  வேறு  எதிலும் மன  அமைதி  காண  முடியாது .
     அல்லாஹ்வை  நினைவு  கூர்வதை  கொண்டுதான்  இதயங்கள்  அமைதி  பெறுகின்றன
      அல்லாஹ்வை  உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே  தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு  மனதோடு  கேட்கப்படும்  துஆ  தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.
     அல்லா  கேட்டதையே  கொடுக்கின்றான் . அல்லது அதைவிட  
சிறந்ததை  கொடுக்கின்றான். அல்லது  அந்த  துஆவைக்   கொண்டு வர 
இருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
       நாம்  துஆ  செய்யும்போது இரு கைகளையும்  தோல்,புஜம் வரை உயர்த்தி  முகத்திற்கு நேராக வைக்க வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ 
செய்வது சிறந்தது.துஆ கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.
பின்  ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும் 
தாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .
        துஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்  
ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.
        அடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு 
        அவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லா  
        வெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .  
 சில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.
  1. பாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில்   கேட்கப்படும்  துஆ ,
  2.  பர்ளு  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  3.  தஹஜ்ஜ்த்  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  4. சஜ்தாவில்   கேட்கப்படும்  துஆ 
  5. நோன்பு   திறக்கும்  முன்   கேட்கப்படும்  துஆ .  
                                                                          

    22 comments:

    அந்நியன் 2 said...

    முத்தான பதிப்பு ...இனி அப்படியே "துஆ" செய்கிறேன்

    ஸாதிகா said...

    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
    அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை

    ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளி தருபவன்
    அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்
    பாசத்துடன் யாவரையும் பார்க்கின்றவன்
    பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்

    அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
    அல்லாஹ்வின் பேரருரளை நம்பி நில்லுங்கள்
    அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
    அன்பு நோக்கு தருக வென்று அழுது கேளுங்கள்

    Ahamed irshad said...

    அருமையான பதிவு. சிறப்பு

    ராஜவம்சம் said...

    நல்லா இருக்குமா
    வாழ்த்துக்கள்.

    //தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.//
    இதர்க்கு ஆதாரமான ஹதிஸ் உள்ளதா?

    Asiya Omar said...

    அருமை.உங்கள் வலைப்பூ பயணம் இனிய வசந்தமாக அமைய வாழ்த்துக்கள்.

    ஆயிஷா அபுல். said...

    அஸ்ஸலாமு அழைக்கும்,முகமது அயுப் கே.
    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.உங்களுடைய
    துஆவை அல்லாஹ் கபூலாக்குவனாக.ஆமீன்

    ஆயிஷா அபுல். said...

    அஸ்ஸலாமு அழைக்கும்,ஸாதிகா
    உங்கள் கவிதைக்கு {இ.எம். நாகூர் அனிபா அவர்கள்
    பாடிய பாடல்} மிக்க நன்றி

    Unknown said...

    சலாம்
    உங்களின் பதிவை படித்தேன் பயன் உள்ளதாக இருந்தது .தொடர்ந்து இது போன்ற நல்ல கருத்தை பதிவு செய்யுங்கள் .
    வஸ்ஸலாம்

    ஆயிஷா அபுல். said...

    அஸ்ஸலாமு அழைக்கும்,அகமது இர்ஷாத்,
    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
    மிக்க நன்றி.

    ஆயிஷா அபுல். said...

    அஸ்ஸலாமு அழைக்கும் ராஜவம்சம்
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
    நான் ஹதீஸை படித்துதான் எழுதினேன்.
    பயானிலும் கேட்டு உள்ளேன். நான் ஆலிமா கிடையாது .
    ஆலிம் அவர்களிடம் போன் பண்ணி கேட்டு
    உங்களுக்கு ஆதாரத்தோடு விளக்கம் கண்டிப்பாக
    தருவேன்.

    ஆயிஷா அபுல். said...

    அஸ்ஸலாமு அழைக்கும் ஆசியா உமர்,
    உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் ,
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ஆயிஷா அபுல். said...

    அஸ்ஸலாமு அழைக்கும் ஜமால்,
    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
    நன்றி. தொடர்ந்து நல்ல கருத்தை
    பதிவு செய்ய துஆ செய்யவும்.

    Starjan (ஸ்டார்ஜன்) said...

    அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா..

    அருமையாக துஆ செய்யும்முறைகளை பற்றி விளக்கியுள்ளீர்கள்..

    உங்கள் பதிவில் பாலோயர்ஸ் லிஸ்டை சேர்க்க.. உங்க ப்ளாக்கர் கணக்கில் நுழைந்து செட்டிங்க்ஸ் (அமைப்புகள்) பகுதிக்கு சென்று அங்கே அடிப்படைகள், வெளியிடுதல், வடிவமைத்தல், கருத்துரைகள்.... என்ற டேப் பகுதிகள் இருக்கும். அதில் வடிவமைத்தலை கிளிக் செய்து அதில் மொழி என்று இருக்கும். அதில் ஆங்கிலம் ஐக்கிய அமெரிக்க குடியரசு என்பதை செலக்ட் செய்து சேவ் செய்து மறுபடியும் டாஷ்போர்டுக்கு வரணும்.

    அதில் வடிவமைத்தல் பகுதிக்கு சென்று அங்கே பக்க உறுப்புகள், ஹெச்டிமல் திருத்து இடுகையிடல் என்ற டேப்புகள் இருக்கும். அதில் பக்க உறுப்புகளை செலக்ட் செய்து ஆட் கெட்ஜெட் பகுதிக்கு சென்று பார்த்தால் அங்கே முதலாவதாகவே ஆட் ப்லோயர்ஸ் என்று இருக்கும். அதை ஆட் செய்து சேவ் செய்து இப்போது உங்கள் வலைப்பூவை திறந்து பார்த்தால் அங்கு பாலோயர்ஸ் லிஸ்ட் இருக்கும்.

    நான் சொன்ன இந்த முறைகளில் செய்துபாருங்கள். கண்டிப்பாக பலோயர்ஸ் லிஸ்ட் வரும். என் மனைவி வலைப்பூ ஆரம்பித்தபோது இந்த முறையில் செய்து பார்த்தார். ப்லோயர்ஸ் லிஸ்ட் வந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.

    இப்படி செய்தும் வரவில்லையெனில் உங்கள் மெயிலிருந்து என்னுடைய மெயில் முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். நான் விளக்கப்படங்களுடன் மெயில் அனுப்புகிறேன்.

    அபுலும் இதேபோல விளக்கங்கள் கேட்டார். விளக்கம் அனுப்பினேன்.

    தொடர்ந்து வலைப்பூவில் பிரகாசிக்க என்னுடைய நல்வாழ்த்துகள்.

    என்னுடைய மெயில் முகவரிகள்:

    starsheik121@gmail.com
    starsheik121@yahoo.com

    Starjan (ஸ்டார்ஜன்) said...

    நீங்க கேட்ட விளக்கங்களை இரண்டு நாட்களுக்கு முன்னே அனுப்ப எண்ணியிருந்தேன்.. வேலையினால் தாமதமாகிவிட்டது.

    aysha abul said...

    அஸ்ஸலாமு அழைக்கும் ஸ்டார்ஜன்,
    உங்கள் கருத்துக்கு நன்றி,
    பாலோவேர்ஸ் விட்ஜெட் வைக்க
    தெளிவாக விளக்கமாக எழுதி உள்ளீர்கள்.
    ரெம்ப நன்றி.சந்தோசம். அதன்படி
    வைத்துள்ளேன், உங்கள் மனைவின்
    வலைபூ முகவரி தெரிவிக்கவும். .

    Starjan (ஸ்டார்ஜன்) said...

    ரொம்ப சந்தோசமாக உள்ளது ஆயிஷா.. என் வாழ்த்துகள்..

    என் மனைவியின் வலைப்பூ... மின்மினியின் சிந்தனைகள்..

    http://mindsofmini.blogspot.com/

    aysha abul said...

    ஸ்டார்ஜன் வாழ்த்துக்கு நன்றி.
    சந்தோஷத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    உங்கள் மனைவி வலைபூ பார்த்தேன்.சந்தோசம்
    அவர்களை மீண்டும் தொடரசொல்லவும்.
    ரமலான் சிறப்பு படித்தீர்களா

    புல்லாங்குழல் said...

    அருமையான இடுகை. உங்கள் பணி சிறக்க இறைவனை இறைஞ்சுகின்றேன்.

    aysha abul said...

    சலாம் அமீன்,
    உங்கள் கருத்துக்கு நன்றி. என் பனி சிறக்க உங்கள்
    துஆவை அல்லாஹ் கபுலாக்குவனாக. ஆமீன்.

    Jaleela Kamal said...

    துஆக்களின் சிறப்பு மிக அருமை

    ஆயிஷா அபுல். said...

    //Jaleela Kamal சொன்னது…

    துஆக்களின் சிறப்பு மிக அருமை//


    நன்றி ஜலீலாக்கா.

    zumaras said...

    அஸ்ஸலாமு அலைக்கும்
    துஆ பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளது
    அதன்படி அமல் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக.

    Post a Comment