அஸ்ஸலாமு அழைக்கும்!
நபி [ஸல்] பிறப்பு : 20-4-570.திங்கக்கிழமை ரபீ உல் அவ்வல்
மாதம் பிறை :12.
பிறந்த இடம் : புனித மக்கா.
பெற்றோர் : அப்துல்லாஹ்[ரலி]
அன்னை ஆமினா[ரலி]
பாட்டனார் : அப்துல் முத்தலிப்
செவிலித்தாய் : துவையா[ரலி] என்ற அடிமை பெண்,
பின் ஹலிமா[ரலி]அவர்கள்.
பட்டப்பெயர்கள் : அல் அமீன்[நம்பிக்கைக்கு உரியவர்]
அஸ்ஸாதிக் [உண்மையானவர்]
முதல் திருமணம் : அன்னை கதிஜா[ரலி]அவர்களுடன்
மஹர் தொகை : 500 திரஹம்கள்.
திருமணத்தை நடத்தி
வைத்தவர் : அபூதாலிப் அவர்கள்
நபி பட்டம் கிடைத்தது : 40 வயதில் [கி.பி.610]
முதல் வஹீ : இக்ர பிஸ்மி ரப்பிக என்ற வசனம்
மதினாவிற்கு ஹிஜ்ரத் : நபித்துவ 12 ம் ஆண்டில்
தொழுகைக்கு பாங்கு
அறிமுகப்படுத்தப்பட்டது : ஹிஜ்ரி 2 ல்
மது ஹராமாக்கப்பட்டது : ஹிஜ்ரி 6 ல்
மக்கா படையெடுப்பு : ஹிஜ்ரி 6 ல்
ஹஜ் கடமை : ஹிஜ்ரி 9 ல்
நபி{ஸல்}அவர்கள்
ஹஜ் செய்தது : ஹிஜ்ரி 10 ல்
உலகைப் பிரிந்த நாள் : ஹிஜ்ரி 10,ரபிஉல் அவ்வல் பிறை 12,
திங்ககிழமை [8-6-632 ]
நாம் அனைவரும் அலலாஹ்வையும், நபி வழியையும் பின் பற்றி நடப்போமாக! ஆமீன்.
13 comments:
இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். இல்லாவிடின்.. தெரிந்திருத்தல் அவசியம். பகிர்ந்தமைக்கு நன்றி!
சிறப்பாக விளக்கியுள்ளிர்கள் நன்றி கலந்த சலாமை தெரிவித்துக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தகு
மழைநேசன்,உங்கள் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி சகோ M.A.K.
வ அழைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி
வ பரக்காத்துஹு.
sister...
Alhamdullillah.. please change the last sentence.. its not vali... its vazhi...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரி ஆயிஷா அபுல் அவர்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு படைப்பும் நன்றாக உள்ளது, எல்லா நற்காரியத்திற்கும் வல்ல இறைவன் உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்!
சகோதரி ஒரு சிறிய வேண்டுகோல், நீங்கள் உருவாக்கும் படைப்புகளில் எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன, தவிர்க்கவும். உதாரணமாக, நபி (ஸல்) வலியையும் (வழியையும்).
வலி - உடல் வலி, கைக்கால் வலி போன்றது
வழி - பாதை போன்றதைக் குறிப்பது. தவறுகளை சுட்டிகாட்டியதால் உங்கள் மனம் வருந்தினால் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
பெயரில்லா சகோ,
உங்கள் வருகைக்கும்,எழுத்து பிழையை
சுட்டிகாட்டியதற்கும் நன்றி.
உங்கள் பெயரை வெளியிட்டு கருத்தை
சொல்லவும்.
வ அழைக்கும் சலாம் {வரஹ்}
சகோ,ஹாஜா அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
பிழையை சுட்டிகாட்டியதற்கும்,உங்கள் துஆவுக்கும்
ரெம்ப நன்றி சகோ.
அல்லாஹ் உங்களுடைய துஆவை
கபூலாககுவனாக.ஆமீன்.
என் படைப்புகளில் எழுத்து பிழைகள்
இருந்தால்,தயவு செய்து பிழையை சுட்டி காட்டவும்.
அப்பொழுதுதான் அடுத்த முறை அந்த பிழை வராமல்
பார்த்துக் கொள்ளலாம். வழி பிழையை திருத்தி விட்டேன்.
சகோ,இதற்க்கெல்லாம் மன்னிப்பு எதற்கு?
நபிகள் நாயகம்(ஸல்) வரலாற்றை பலர் அறியும் படி பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி,ஆயிஷா.
nandri. asiya omar
வா அலைக்கும் அஸ்ஸலாம் ஆயிஷா.
உஙக்ள் இனிய வசந்தம் அனைவரையும் சென்றடையட்டும்.
அன்புடன்
ஜலீலாக்கா
//Jaleela Kamal சொன்னது…
வா அலைக்கும் அஸ்ஸலாம் ஆயிஷா.
உஙக்ள் இனிய வசந்தம் அனைவரையும் சென்றடையட்டும்.
அன்புடன்
ஜலீலாக்கா//
வாங்க ஜலீலாக்கா !
என்னுடைய நோக்கமும் அதுதான் சகோதரி.
வணக்கம் சகோதரி,
சில கருத்துகளை கூற விழைகிறேன்.
1.ஹிஜ்ரா அல்லது ஹிஜ்ரத் என்னும் மக்காவில் இருந்து மதினா இடம் பெயருதல் நடை பெற்றது பொ.ஆ 622.அதாவது முதல் வெளிப்பாடு பெற்றபொ.ஆ 610 ல் இருந்து சரியாக 12 ஆண்டுகள் கழித்து.
___________
2.முதல் வஹி என்பது அரபியில் மட்டுமெ கூறியுள்ளதால்(ஸூரத்துல் அலஃக்)96 ஆம் சுராவின் முதல் வசனம் த்மிழில் தருகிறேன்.
*******************
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
*********************
3. மக்கா படையெடுப்பு என்றால் எதை குறிப்பிடுகிறீர்கள்? மக்கா கைப்பற்றப் படல் என்பது அல்லவா!!!..இது நடந்தது பொ.ஆ 11,ஜனவ்ரி 630(ஹிஜ்ரா 8).
http://en.wikipedia.org/wiki/Conquest_of_Mecca
******************
4.திரு முகமதிற்கு இன்னும் பல பெயர்கள் உண்டு.முகமது என்றாலேயே புகழுக்கு உரியவர் என்றே பொருள்.
http://en.wikipedia.org/wiki/Muhammad_in_Islam#Names_and_titles_of_praise
***********
நன்றி.
Post a Comment