சலாம் கூறுவதின் சிறப்பும்,அதன் பரப்புவதன் அவசியமும்,
இறை விசுவாசிகளே! உங்களின் வீடுகள் அல்லாத{மற்றவர்}வீடுகளில்,
நீங்கள் உள்ளே நுழைய அனுமதி பெற்று,அவர்களுக்கு நீங்கள் சலாம்
கூறும்வரை உள்ளே நுழையாதீர்கள்.{24:27}
நீங்கள் வீடுகளில் நுழைந்தால்,அல்லாஹ்விடமிருந்துள்ள வாழ்த்தாகவும்,
தூய்மையான அபிவிருத்தியாகவும் உள்ள சலாமை உங்களிடையே
கூறிக்கொள்ளுங்கள்[24:61]
ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம்"இஸ்லாத்தில் சிறந்தது எது?"என்று கேட்டார்.பசித்தவனுக்கு நீர் உணவளிப்பது,நீர் அறிந்தவர்,அறியாதவர் என அனைவருக்கும்சலாம் கூறுவது"என்று நபி[ஸல்] பதில் கூறினார்கள்.{புகாரி:12.முஸ்லிம்:39}
அல்லாஹ் ஆதம்[அலை]அவர்களைப் படைத்த போது[அவரிடம்]"நீர் சென்று அங்கேஉட்காந்திருக்கின்ற வானவர்களுக்கு சலாம் கூறுவீராக! உமக்கு அவர்கள் கூறும்வாழ்த்துக்களை நீர் கேட்பீர்ராக! நிச்சயமாக அது உமக்குரிய வாழ்த்துகளாகும்.உம வாரிசுகளுக்குரியே வாழ்த்துக்களாகும்."
அஸ்ஸலாமு அழைக்கும்{உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக}
என ஆதம்{அலை}வானவர்களிடம் கூறினார்.உடனே அவர்கள்
அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி[உங்கள் மீதும் அல்லாவின் சாந்தியும்,அவனின் கருணையும் உண்டாவதாக}என்று கூறினார்கள்.[புகாரி:3326.முஸ்லிம் :2841]
மனிதர்களே!சலாம் கூறுவதை பரப்புங்கள்.பசித்தவனுக்கு உணவளிங்கள்.
உறவினர்களை ஆதரிங்கள்.மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள்
தொழுங்கள்.சலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று
நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொன்னால் பத்து நன்மைகள்,
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்றால் இருபது நன்மைகள்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு என்று சொன்னால் என்று கூறினால் 30 நன்மைகள்.
முஹ்மீனுக்கு முஹ்மீன் வலைப்பூவில் உங்கள் கருத்தை பகிரும் போது முதலில் சலாத்தை கூறுங்கள்.நாம் சலாத்தை கூறி அதன் பயனை
பெறுவோமாக!
16 comments:
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு.
வ அழைக்கும் சலாம் வரகுமதுலாஹ் வபரக்காதுகு
சகோ,கொஞ்ச நாட்களாக உங்களை காணோம்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு
வ அழைக்கும் சலாம் வரகுமதுலாஹ் வபரக்காதுகு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஆயிஷா. நல்ல பகிர்வு, நல்ல தகவல்களை அறிந்து கொண்டோம்.
இப்படி எல்லோரும்.. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகுன்னு சொல்லிட்டுப் போனா எப்படி ?விளக்கியவருக்கு வாழ்த்தும் சொல்லிட்டுப் போங்க.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு.
வ அழைக்கும் சலாம்{வரஹ்}
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஷேக்.
உங்கள் பதிவை படித்தேன்.ரெம்பவும் அருமையாக,
விளக்கமாக எழுதி இருந்தீர்கள். 3 ஆண்டுதொடங்கும்
உங்கள் பதிவிற்கு மதனி யின் அன்பானவாழ்த்துக்கள்.
நல்லபடியாக ஊர் போய வரவும்.என் தங்கைக்கு
என் சலாம் சொல்லவும்.சென்னை வரவும்.
நானும் தங்கைக்கு மெயில் அனுப்புகிறேன்.
சகோ,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
வ அழைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரக்காத்தஹூ
சகோதரி., அருமையான அதே நேரத்தில் மனித சகோதரத்திற்கு தேவையான பதிவு.,
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். திருக்குர்-ஆன் 4-86
அல்ஹம்துலில்லாஹ்! ஒரு வாக்கியத்திற்கு முப்பது நன்மைகள் அல்லாஹ் கருணையாளன் வாரி வழங்க தயாராக இருக்கிறான் ஆனால் நாம் வார்த்தையில் கூட கஞ்சனாக இருக்கிறோம் எளிதாக கிடைக்கும் பத்து நன்மைக்களை பெறக்கூட தயங்குகிறோம்.
//முஹ்மீனுக்கு முஹ்மீன் வலைப்பூவில் உங்கள் கருத்தை பகிரும் போது முதலில் சலாத்தை கூறுங்கள்.நாம் சலாத்தை கூறி அதன் பயனை
பெறுவோமாக! //
எனினும் சிறிய வருத்தம் சகோதரி., சலாம் பிறருக்கு கூறுவது குறித்த அவசியத்தை பதிவிடும் தாங்கள் சலாம் கூறி துவங்காதது ஏனோ...?
வ அழைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரக்காத்தஹூ
சகோ, படத்தில் அரபி யில் அஸ்ஸலாமு அழைக்கும்
என்று போட்டதால்,தமிழில் போடவில்லை.
ASSALAMUALAIKUM
வ அழைக்கும் சலாம்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு
//Jaleela Kamal சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்
வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு//
வ அழைக்கும் சலாம் வரகுமதுலாஹ் வபரக்காதுகு
அஸ்ஸலாமு அலைக்கும்... இந்த வலைப் பூவுக்கு
எவ்வாறு இடுகைகள் அனுப்புவது?
இதோ! குலசை பற்றிய என் கவிதையின்(?) ஆரம்ப வரிகள்:குலசை எங்க ஊரு!!!
உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள்!
உச்சியில் நின்று பார்க்கிறேன்
ஒய்யார சுவனத்துப் பூங்கா இது!
இடியோசையாய் அலைகள்
இரவெல்லாம் தாலாட்டும்!
‘அ’ என்ற அகரம் எழுதிப்
பழகிய மண்ணிது!
கரு ஈந்து கல்வி தந்து
திரு கொண்ட திரவியம் தந்த
அட்சய பாத்திரம் இது!
ஆரம்பக் கல்வியில் அடியெடுத்து
நடைப் பழகிய அசனியா பள்ளி உண்டு!
உயிர் கல்வியாம் உயர் கல்வி தந்த
அக இருள் போக்கும்
திரு அருள் பள்ளி இங்கு!
ஒரே மண்ணைச் சார்ந்தவர்கள். யாரென்று தெரியவில்லை... உறவா? தெரிந்த முகமா? அறியவில்லை.. எந்த தெரு? குலசையில்!
குலசை சுல்தான் (எ) Engr.Sulthan
//அஸ்ஸலாமு அலைக்கும்... இந்த வலைப் பூவுக்கு எவ்வாறு இடுகைகள் அனுப்புவது?//
வ அழைக்கும் சலாம்
என் ஈமெயிலுக்கு தாங்கள் இடுக்கை அனுப்பினால் நான் என் பதிவில் வெளியிடுகிறேன்.அல்லது தாங்கள்
பிளாக் ஓபன் பண்ணி அதில் வெளியிடவும்.
நம்ம ஊர் பற்றின கவிதை அருமை.
//ஒரே மண்ணைச் சார்ந்தவர்கள். யாரென்று தெரியவில்லை... உறவா? தெரிந்த முகமா? அறியவில்லை.. எந்த தெரு? குலசையில்!
குலசை சுல்தான் (எ) Engr.Sulthan //
ஒரே மண்ணைச் சார்ந்தவர்கள் நிச்சயமாக தெரிந்தவர்களாக தான் இருக்கணும்
நீங்கள் யார் ? எந்த தெரு என்று சொல்லுங்கள்.
puthiyavasantham.blogspot.com.
இதையும் பாருங்கள்.
Post a Comment