31 October 2010

குர்ஆன் ஓர் அற்புதம்

அஸ்ஸலாமு  அழைக்கும்!                                                             
                                                           
திருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது       

குர்ஆன் அருளப்பட்ட அரபிமொழி இன்றும் அதே பாணியில் பேசப்படுகின்றது. ஆனால் அதே வேளையில் பல வேத மொழிகள் இன்று உலகில் அடிச்சுவடு இல்லாமல் மறைந்து போய்விட்டன. மூலமொழியில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஒரே வேதம் திருமறைதான். இதுவல்லவா அற்புதம் என்று சிலர் வியக்கின்றனர். பெருவாரியான மக்களால் மனனம் செய்யப்பட்டு வருகின்ற ஒரு வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்பதை  அற்புதமாக பேசுகின்றனர் . எல்லா நாடுகளிலும், எல்லாமொழி பேசும் மக்கள் மத்தியிலும் அதன் மூல மொழியில் ஓதப்படுகின்ற ஒரே வேதம் திருகுர்ஆன.  

உலகில் இரவிலும், பகலிலும் ஒவ்வொரு நாளிலும் அதிகமான மக்களால், அதிகமாக ஓதப்படுகின்ற வேதம் அது.
கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாத, தூய்மையான கண்ணியமான வேதம் திருகுர்ஆன் ஒன்றே.
இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் யாவும் திருகுர்ஆனை உண்மைபடுத்துகின்றனவே என்று மூக்கின் மேல் விரல் வைக்கின்றனர்  
ஒரு அருமையான ஆரோக்கியமான அரசியல் சிந்தாந்தம் அல்லவா திருகுர்ஆன் என்று ஆச்சரியபப்படுகின்றனர்.

குர்ஆன் படித்த பின்னால்தான் இறைவன் மீது நம்பிக்கையும், ஒரு மரியாதையும் வருகின்றது என்கின்றனர் சிலர். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடாது, மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்று மனிதனின் சுயமரியாதையை காக்கும் அரணாக திருகுர்ஆன் என்கின்ற வேதம் ஒன்றுமட்டும் தான் போதிக்கின்றது என்று ஒப்புக் கொள்கின்றனர். தனி மனித உரிமைகளை திருகுர்ஆன் வலியுறுத்துவது போல் இதுவரை எந்த முற்போக்காளரும் வலியிறுத்தவில்லை.

திருகுர்ஆன் மனிதனின் சிந்தனையை தூண்டுவது போல், வேறு எந்த வேதமும் தூண்டவில்லை என்று நற்சான்றிதழ் அளிக்கின்றனர் சில தலைச்சிறந்த சிந்தனையாளர்கள். திருகுர்ஆன் ஒன்றுதான் தேசியம், பிராந்தியம், இனம், மொழி ஆகிய உணர்வுகளுக்குப்பால் ஒன்றுப்படுத்துகின்றது என்று மனம் குளிர்கின்றனர். மனித ஒருமைப்பாட்டை விரும்புபவர்கள். உண்மையான மனித நேயம் திருகுர்ஆனில் அல்லவா இருக்கின்றது என்று மயங்குகின்றனர் மனித நேயம் மிக்கவர்கள். திருகுர்ஆன் தோற்றுவித்த, தோற்றுவித்துக் கொண்டிருக்கின்ற புரட்சிகளைப் போல் வேறு எந்த  புரட்சியாளரும் தோற்றுவிக்கவில்லை என்கின்றனர் உண்மையான புரட்சியாளர்கள்.

இன்று அனைத்துலக வல்லரசுகளும் தடை செய்யத் துடிக்கும் ஒரு நூல் உள்ளது என்றால் அது திருகுர்ஆன் ஒன்றே.
இன்னும் சிலர் உலக அமைதிக்கு திருகுர்ஆன் சொல்லும் தீர்வுகள் தான் தீர்க்க தரிசனம் மிக்கவை என்கின்றனர்.குர்ஆன் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்களை விட மேலான சட்டத்திட்டங்கள் இது வரை யாராலும் படைக்க முடியவில்லை என்று ஆச்சரியபப்டுகின்றனர் சில சட்ட வல்லுனர்கள். பெண்களின் கெளரவம், பெண்களின் கண்ணியம் திருகுர்ஆன் வழங்குவது போல் வேறு எந்த வேதமும் வழங்கவில்லை என்று ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் சில அகில உலக மகளிர் அமைப்புகள். இறைவனின் மகிமையையும், பெருமையையும், அவன் மதிப்பையும் திருகுர்ஆனைப் போல் எந்த வேதமும் எடுத்துரைக்கவில்லை என்று பரவசப்படுகின்றனர் சில கடவுள் நம்பிக்கையாளர்கள்.

மனிதனுக்குத் தேவையான எல்லாத் துறைகளுக்கும், திருகுர் ஆனைப்போல் வேறு எந்த வேதத்தாலும் வழிகாட்ட முடியவில்லை என்று முழங்குகின்றனர் சில அறிவு ஜீவிகள். உலகில் உள்ள அத்தனை மூடநம்பிக்கைகளையும் முளையிலேயே கிள்ளி எறிகின்ற வேதம் திருகுர்ஆன் ஒன்றே. இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்ற உயர்ந்த தத்துவத்தை, திருகுர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் தெளிவாக எடுத்துரைக்கவில்லை.

மனிதனால் கலப்படம் செய்ய முடியாத மாசுப்படுத்தப்படாத வேதம் திருகுர்ஆன் மட்டுமே என்று மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றன. திருகுர்ஆன் அரபு மொழியில் மிக தரமான இலக்கியத்தில் அமைந்துள்ள அதே வேளையில், பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் புரிந்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இது ஆச்சரியமான உண்மையாகும் என்று மொழிகின்றனர் சில மொழி வல்லுனர்கள்.

காணும் அற்புதம் திருகுர்ஆனில் மட்டும் தான் இறைவனே முழுக்க முழுக்க பேசுகின்றான்.
திருகுர்ஆன் மட்டும்தான் இறைவன் மட்டும் பேசும் இறைவேதமாக இருக்கின்றது. இதை யாராலும் எவராலும் மறுக்க முடியாது
திருகுர்ஆன் மக்களுடன் பேசுவது போல் மற்ற எந்த வேதமும் பேசவில்லை.
திருகுர்ஆனின் மூலம் மனிதர்களிடம் இறைவன் நேரிடையாகச் சொல்கின்றன.
திருகுர்ஆனில் மட்டும் இறைவன் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கின்றான்.
இறைவனுடன் பேசும் அந்த அற்புத அனுபவத்தை அடைய விரும்புபவர்கள் திருகுர்ஆன் படிக்கட்டும்.                         

5 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நாளாச்சி.. பதிவு எழுதி.. குர்ஆனின் சிற‌ப்புகளை பற்றி அருமையாக எழுதியிருக்கீங்க.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி.. மேலும் தொடருங்கள்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்!
பதிவு போட்டு 1 மாதம் ஆகி விட்டது.
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்
ரெம்ப நன்றி.

அந்நியன் 2 said...

உலக மக்கள் வாழ்வதற்கு வந்தது குரான்
உண்மையான மார்க்கம் தன்னை தந்தது குரான்
இலங்குகின்ற இறைவன் சொன்ன வேதமே குரான்
இருலகத்தின் ஒளி பரப்பும் தீபமே குரான்.தீபமே குரான் ..தீபமே குரான் .

புனித லைலத்துல்கதிரில் ஹீரா குகையிலே
பொறுமை நபிகள் இறையை வணங்கிஇருக்கும்போதிலே
கனிவுடனே ஜிப்ரீலு வந்து இக்றகு என்றார் காந்த நபிகள் ஏந்திக் கொண்ட காந்தமே குரான் காந்தமே குரான்..காந்தமே குரான்

இறைவன் சொன்ன மறையின் வசனம் தொடர்ச்சியாகவே..
ஏந்தல் நபிக்கு இறங்கியதே இனிமையாகவே
நிறைவு வேதம் அதனைக் கொண்டு மாந்தர்க்கெல்லாம்
நேர்மைப் போதம் புரிய வைத்தக் கோர்வையே குரான் கோர்வையே.. குரான்.கோர்வையே குரான்.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வாகையாய்
அருமையுள்ள சரித்திரங்கள் கூறும் ஈகையாய்.
மெச்சுகின்ற உவமை சொல்லி விளக்கும் புதுமையாய்.
மேன்மையான அருளில் கூறும் பான்மையே .குரான் பான்மையே குரான்..... பான்மையே குரான்.

ஒன்று இறைவன். ஒன்று குலம் என்று கூறுமே
உலகம் எங்கும் அமைதி வாழ்வு ஓங்க்கச்செய்யுமே.
முன்னவனாம் இறைவனையே வணங்கிட வேண்டும் .
என்ற எண்ணம் வழங்குகின்ற நன்மையே குரான் நன்மையே குரான் நன்மையே குரான்.

அஞ்ஞானத்தை அறியாமையை அகற்றும் நாளுமே
ஆக்கம் உள்ள கலைகள் எல்லாம் கற்கத் தூண்டுமே
விஞ்ஞானத்தை மாந்தரெல்லாம் அறியச்சொல்லுமே
மேதையோர்கள் வாழ்த்துகின்ற போதமே குரான் போதமே குரான் போதமே குரான்.

ஆயிரத்து நானுறு .ஆண்டு ஆகியும்
அணுவளவு மாறிடாத அற்ப்புத வேதம்
தூயமாக கோடி கோடி தீனோர் நெஞ்சிலே
துங்கமுடன் மிளிரிகின்ற தங்கமே குரான்
தங்கமே குரான் .தங்கமே குரான் .

எந்த மறைக்கும் இல்லாச் சிறப்பு ஆற்றல் காணலாம்
இகத்தில் உள்ள எல்லா நோயிக்கும் மருந்துகாணலாம்
அந்த மோங்கும் சொர்க்க வாழ்வை அடையத்தூண்டிடும்
அழகுசார்ந்த அரபு மொழியில் எழில் மறை குரான்எழில் மறை குரான் எழில் மறை குரான்

இதயம் கவர ஓதுகின்ற காரிகள் கோடி
ஏற்றமோடு மனனம் செய்த ஹாபிஸ்கள் கோடி
உதயமாகும் கிழக்கு சொத்து மேற்கு நாடலாம்
உயர்வு நாதம் முழங்குகின்ற பயன்மரைக் குரான்
பயன்மரைக்குறான் ..பயன்மரைக்குறான்.

வைய்யத்துக்கே வழி காட்டும் வான்மறை வாழ்க
வார்மையுள்ள அறிவை யூட்டும் தேன்மறை வாழ்க
தூய நாயன் போதம் ஏந்தும் யாவரும் வாழ்க
துன்பம் நீக்கி இன்பம் சேர்க்கும் பொன்மறைகுறான்
பொன்மறைகுறான்.

உலக மக்கள் வாழ்வதற்கு வந்தது குரான்
உண்மையான மார்க்கம் தன்னை தந்தது குரான்
இலங்குகின்ற இறைவன் சொன்ன வேதமே குரான்
இருலகத்தின் ஒளி பரப்பும் தீபமே குரான்..தீபமே குரான் ..தீபமே குரான் .
இது நாகூர் ஹனிபா பாடப் பாட கேட்டு எழுதனதுங்க,உங்களின் ஆக்கம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்!
வாங்க நாட்டாமை,நல்ல படியா ஊர்
போய் வந்தாச்சா.எல்லோரும் நலமா,
உங்கள் தெளிவான,விரிவான
கருத்துக்கு ரெம்ப நன்றி சகோ.

The Tamil Language said...

assalamu alaikku (varah)
quranil pengalin thirumana muraigalai koora mudiyuma...

Post a Comment