12 September 2010

இறைவனுக்கு இணை வைத்தல்

                                      பெரும் பாவம்                                  அஸ்ஸலாமு  அழைக்கும்

நாம்  வாழும் உலகில் எல்லா படைப்புகளையும் வல்ல இறைவன் படைத்து ஒழுங்கு படுத்தி அவைகளை ஒரு வரையறைக்குள் வாழ வைத்து    கொண்டிருக்கிறான்.இதில் சிறந்த படைப்பு மனித இனம் மட்டுமே.             இந்த மனிதனை படைத்தது;அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும்,
ஆற்றல்களையும் வழங்கி சிறப்பித்திருக்கிறான்.

மனிதன் தன்னை மட்டுமே வணங்கி வர வேண்டும். 
தனக்கு நிகராக எந்த படைப்பையும் கொண்டு,
தனக்கு இணை கர்ப்பிக்கக்கூடாது 
என்பது தான் இறைவனின் கண்டிப்பான 
கட்டளை !                            
     
"திக்ர்" எனும் தியானம் 'துஆ' எனும் பிரார்த்தனை 'ஸஜ்தா' என்ற 
சிரம்பணிதல்,மற்றநேர்ச்சை, குர்பானி,வணக்க வழிபாடுகள் யாவும் எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே.
                                            
இந்த வணக்கத்தை இறைவனின் படைப்புகளுக்கு செலுத்தி 
கவுரவப்படுத்திடும் போது  இவைகளை எல்லாம் படைத்த இறைவன் மிகவும் ரோஷம் கொள்கிறான்.கோபப்படுகிறான்.தன்னை மனிதன் மதிப்பதில்லை.
தான் படைத்த படைப்புகளை தன்னைவிட மதித்து வழிபடுகிறானே என்று 
ஆக்ரோஷம் கொள்கிறான்.அகிலங்களின் புகழுக்கெல்லாம்  இறைவன் மட்டுமே சொந்தக்காரன்.அத்தகைய புகழை பிறருக்கு தாரை வார்த்து வருவதை கண்டிக்கிறான். அவர்களை தண்டிக்கிறான்.
                                                                                                              நிச்சயமாக இறைவன் தனக்குஇணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். மேலும் இது அல்லாததை {குற்றங்களை}த்தான், நாடியவர்களுக்கு  மன்னிப்பான்,மேலும் யார் இறைவனுக்கு இனைவைப்பாரோ,அவர் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டார் {அல்குர்ஆன 4:116}
                                                                                                               சமாதி {கப்ர்}வணக்க வழிபாட்டினை  ஆதரித்து அடக்கஸ்            தலங்களுக்கு{தர்காக்களுக்கு] சென்று  வழிபட்டு  வருபவர்களே!
கப்ர் எனும் சமாதிகளை வணங்க இஸ்லாம் தடுத்துள்ளேதே."உங்களின்  செருப்பு வார் அறுந்தாலும் இறைவனிடமே  கேளுங்கள்!"என்று இறைத்தூதர் 
முஹம்மத்{ஸல்}அவர்கள் கூறியிருக்க {கப்ர்]சமாதிகளில்  சென்று  மண்டியிட்டு  மன்றாடுவது எந்த வகையில் எந்த வகையில் நியாயம்?
                                                                                                     இனியேனும் இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் இப்பாவச் செயலை விட்டு தவிர்த்திடுவீர் !    
                                                                                                                          சமாதி[கப்ர்]களை தரிசனம்{ஜியாரத்} செய்பவர்கள் மீது இறைவனின் சாபம் இறங்குகிறது.இறைத்தூதர்{ஸல்}அவர்கள்கூறுகிறார்கள்.அடக்கஸ்தலங்களை வணக்கஸ்த்தளங்களாக ஆக்கி விடாதீர்கள்.
                                                                                                              இறைவா என் சமாதி{கப்ர்}யை வணங்கும் இடமாக ஆக்கி விடாதே என்று இறுதி இறைதூதர் இறைவனிடம் இறைஞ்சியதை  ஒரு வினாடி எண்ணிப்பார்க்க வேண்டாமா?
                                                                                                      இறைவனுக்கு இணைவைத்திடும் இக்கொடிய பாவத்தைவிட்டு 
விலகி;ஐந்து நேரம் தொழுகையை முறையாக கடைப்பிடித்து;
நம்மைப்படைத்த இறைவனிடமே கையேந்தி பிரார்த்திப்போமாக!!!
                                                                                                          இறைவன் கூறுகிறான் :நீங்கள் பிரார்த்திப்பீராக ! உன்னையே 
நாங்கள் வணங்குகிறோம் .இன்னும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.{அல்பாத்திஹா அத்தியாயம் 1-வசனம்:


 நாம்  அல்லாஹுவின்  மீது நப்பிக்கை கொண்டு, அவனுக்கு 
இணை வைக்காமல்  நடப்போமாக!

10 comments:

அந்நியன் 2 said...

அழகான ஒரு கட்டுரை நாமளும் எவ்வளவு சொல்லியும் முட்டாள் ஜனங்களுக்கு புரிய மாட்டங்கிறது.
ஐயோ இந்த ஏர்வாடியில் இந்த லப்பை மார்கள் அடிக்கிற கூத்து இருக்கே சொல்லி மாள முடியாது,இவனுங்களுக்கெல்லாம் அழிவு எப்படி வரப் போகுதோ?
நூறு ரூபாய்க்கு ஒரு பாத்திக ஒதுறான் ஐநூறு ரூபாய்க்கு ஒரு பாத்திஹா ஒதுறான் ஓதிக்கிட்டு இருக்கியிலியே வேறே யாராவது வேறொரு ஆளிடம் அவனைக் கிராஸ் செய்து போகும்போது பாத்திகாவிலியே கஷ்ட்டமர்களை கூப்பிடுவாணுங்க, அது நமக்குத் தெரியாது.இல்லாத ஜனங்கள் ஏதோ தம்மால் இயன்றதை ரெண்டு ரொட்டித் துண்டு சுட்டு போகும்ங்க அதுக்கு அவன் ஓதுற பாத்திகா இருக்கே .....பாதி ரொட்டிக்கும் பனிரெண்டு ரூபாய்க்கும் அல்பாத்திகா என்று இழுக்கையிலே நாமா எழுந்திருச்சு போயிட வேண்டியதுதான்..
இறைவன் நமக்கு ஆறறிவைக் கொடுத்தது, எதுக்குன்னு சிந்திச்சோம் என்றால், இது போல மூட நம்பிக்கைகளை அறவே ஒலித்திடலாம்.

நல்லக்கட்டுரை அனேகமா நீங்கள் இதற்க்கு அதிக கம்மேன்ட்ஷ்களை எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கிறேன் .
தெரிவிக்க வேண்டியது நமதுக் கடமை.ஏற்ப்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.

ஆயிஷா அபுல். said...

சலாம் அயுப்,
ஜனங்கள் புரியும் வரை சொல்லி கொண்டே இருப்போம்.
நிச்சயம் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு மாறுவார்கள்.
லெப்பைகள் கூத்து ஏர்வாடி யில் மட்டும் அல்ல.எல்லா ஊர்களிலும்.
தாங்கள் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
கமெண்ட்ஸ் எதிர்பார்த்து நான் எழுதவில்லை.
நான் அறிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள.

Thamiz Priyan said...

நல்ல விஷயத்தை எழுதி இருக்கீங்க.. இதை வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டியது நமது கடமை.

ஆயிஷா அபுல். said...

தமிழ் பிரியன்,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரி.,ஏதெச்சையாக வலை உலா வரும் வழியில் உங்கள் வலைப்பூவை கண்டேன். "இணை வைத்தல்" குறித்த நல்ல பதிவு., இறை நாட்டத்தால் அனைத்து மக்களும் தெளிவடைவார்கள். சகோதரி ஒரு சந்தேகம். வலதுபுறம் கடிகாரத்திற்கு மேலே "நல்ல நேரம் " என பதிந்திருக்கிறீர்கள். அது சின்ன நெருடலாக இருக்கிறது.சரியான புரிந்துணர்வில்லாமல் பார்போருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் இருப்பதாக ஒரு எண்ணத்தை இது ஏற்படுத்தும் என்பது என் எண்ணம்.ஏனெனில் காலத்தின் மீது குறை கூறாதீர்கள்- நிச்சயமாக நானே காலமாக இருக்கிறேன் என்கிறான் இறைவன். இது சரியாக இருந்தால் மாற்றிக்கொள்ளவும்.தவறான கருத்தாக இருந்தால் தெளிவு படுத்தவும்.

ஆயிஷா அபுல். said...

வ அழைக்கும் சலாம் வரஹ்,
சகோ குலாம், உங்கள் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றி. ஒரு குறிப்பிட்ட நேரத்தை
நல்ல நேரம் என்று சொன்னால்தான் தவறு.
24 மணி நேரம், நல்ல நேரம் என்று குறிப்பிட்டு
உள்ளேன். எந்த நேரத்தை கெட்டநேரம் என்று
சொல்வீர்கள். உங்களை போல் எத்தனையோ
பேருக்கு அது தவறாக புரியும். ஆதலால்
நான் மாற்றி கொள்கிறேன். காலத்தை
குறை சொல்ல வில்லை.எல்லாமே இறைவன்
நாட்டப்படி தான் நடக்கும்.

ராஜவம்சம் said...

சிறந்தப்பதிவு
வாழ்த்துக்கள்.

ஆயிஷா அபுல். said...

ராஜவம்சம் உங்கள் கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் நன்றி.

மழைநேசன் said...

நல்ல பதிவு! பெரும்பாலும் நம் சமுதாயத்தினர்கள் இணை வைப்பதை விட்டும்.. விலகி நல்ல பாதையை நோக்கி வரத் தொடங்கிவிட்டார்கள்! அல்லாஹ்வை மட்டுமே வணங்கி.. இறைவனின் பொருத்தத்துடன் வாழ்ந்து.. மருமையில் சுவனம் செல்லக்கூடிய நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக! ஆமீன்!!

ஆயிஷா அபுல். said...

உங்கள் கருத்துக்கு நன்றி
சமுதாயத்தில் சிலர் தெரிந்தே
அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள்.அல்லாஹ்
அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக.

Post a Comment