அஸ்ஸலாமு அழைக்கும்!
மனிதன் ஒரே ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளான்.
"என்னை வணங்குவதற்காகவே ஜின்களையும் மனிதரையும்
படைத்திருக்கின்றோம் " என்று அல்லாஹ் கூறுகிறான் {51:56}
மனிதர்கள் இவ்வுலகில் தன்னைப்படைத்த இறைவனை வணங்கி வாழ வேண்டும். வணக்கத்தில் மிகச் சிறந்தது தொழுகை. தீர்ப்பு
நாளில் மனிதன் தான் இவ்வுலகில் செய்த ஒவ்வொரு செயலுக்கும்
பதில் அளித்தே ஆக வேண்டும். இவ்வாழ்கையில் அவனுக்களிப்பட்ட
அருட்கொடைகளைப் பற்றி அவன் விசாரனை செய்யப்படுவான்.
பின்னர் உங்களுக்கு இறைவன் புரிந்த அருளைப்பற்றியும் அந்நாளில்
நீங்கள் கேட்கப்படுவீர்கள்.என்று குர்ஆன கூறுகிறது [102:8}. ஆனால்
கடுமையான அந்நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி
தொழுகையைப் பற்றியதாகும்.
நியாயத் தீர்ப்பு நாளில் அவனது செயல்கள் சாட்சியாக வைக்கப்படும்போது ,முதல் நிலையாகிய தொழுகை சரியாக அமைந்திருந்தால் மறுமையின் நிலையும் சரியாக அமைந்து விடும் .தொழுகை சரியாக அமையாவிட்டால் மறுமையில் அளவற்ற கஷ்டங்களை எதிர்நோக்க நேரிடும்.
ஒரேயொரு தொழுகையை கவனக் குறைவாக விட்டாலும்
அது ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் பாவமாகும்.
கடுமையான போர்க்களங்களில் கூட ஒரு முஸ்லீம் தொழுகையை
தவறவிட அனுமதி இல்லை. மாதவிடாய் சமயத்தில் மட்டும்
{பெண்களுக்கு} இதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் எவ்வளவு கடும் நோய்னால் பாதிக்கப்பட்டிந்தாலும் ,
அவர்களது உணர்வுகள் இருக்கும்வரை தொழுதே ஆக வேண்டும்.
நாம் எல்லோரும் அல்லாஹ்வை ஈமான் கொண்டு,
ஐந்து நேர தொழுகையை கடைபிடிப்போமாக!
No comments:
Post a Comment