அஸ்ஸலாமு அழைக்கும்.
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி,
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..
15 comments:
நிச்சயமாக இறைவன் தந்த ஒரு பெரிய பொக்கிஷம், அதை நாம் ஒவ்வொருவரும் சரியான முறையில் படித்து நடந்து வந்தால்,நாம்
நேர்வழி அடைய முடியும்.
நல்ல முறையில் விளக்கியுள்ளிர்கள், மிக அருமை, இன்ஷா அல்லாஹ் நன்மையை செய்து தீமையிலிருந்து விலகி இருப்போம் .
உங்களது சேவை மென்மேலும் ஒளிர வாழ்த்துகிறேன்.
அல்ஹம்துலில்லாஹ் சிறப்பாக தொகுத்து இறுக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
நல்ல விளக்கத்துடன் எழுதியுள்ளீர்கள்.
இறைவன் நம் அனைவருக்கும் சுவர்கத்தை தந்து அதன் பாக்கியங்களை பெறச்செய்வானாகவும் ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா! எப்போதுமே குர்ஆனை ஓதிவரவேண்டும் என்றாலும், அதிகமாக நன்மைத் தரக்கூடிய இந்த ரமலானில் அதன் சிறப்பு பற்றி சொன்னது மிகவும் பயனுள்ளது. உங்கள் பணி சிறப்பதற்கு இறைவன் துணை புரிய வாழ்த்துகிறேன்.
சலாம் இளமதூயவன்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
சலாம் அயுப்,
உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
சலாம் ராஜவம்சம்,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
சலாம் மலீக்கா,
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் துஆவை அல்லாஹ கபுலாக்குவனாக,ஆமீன்.
வஅழைக்கும்சலாம் அஸ்மா,
உங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி.
குர்ஆன் பற்றிய நல்ல தெளிவான விளக்கங்கள்.. மேலும் தொடருங்கள்..
குர்ஆன் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள்.. நன்றி..
சலாம் மின்மினி ஸ்டார்ஜன்
உங்கள் கருத்துக்கு நன்றி.
சலாம் ஷேக்,{ஸ்டார்ஜன்}
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி
உங்கள் மனைவி பெயர் என்ன?
சமயம் கிடைக்கும்போது இதையும் பாருங்கhttp://fmalikka.blogspot.com/2010/09/blog-post.html
Post a Comment