23 August 2010

ரமலான் சிறப்பு


அஸ்ஸலாமு   அழைக்கும. 
ரமலான்  மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி



ரமலான்  மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான்  மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமலான்  மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமலான்  பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமலான்  பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமலான்  ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமலான்  மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமலான்  மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

நோன்பு  காலத்தில்இறைவன் வழங்கிய சலுகைகள்.                                                 1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. கர்ப்பிணிப் பெண் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
5. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
6. பால் கொடுக்கும் தாய் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்

ரமலான்  மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187

2. ஊசி போடலாமா ?
உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? 
எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்

4. கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் நோன்பை விடலாமா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

5. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?
நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

6. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

13 comments:

Unknown said...

புனித ரமழானை பற்றி அழகாக,சிறப்பாக
சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்

தூயவனின் அடிமை said...

ரமலானை பற்றியும் அவை நமக்கு அளித்துள்ள சிறப்புகளையும், நோன்பாளிகளுக்கு கொடுத்துள்ள சலுகைகளையும்
அருமையா விளக்கியுள்ளிர்கள்.

aysha abul said...

அஸ்ஸலாமு அழைக்கும் அபுல்,
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

aysha abul said...

இளம்தூயவன் உங்கள் வருகைக்கும,
கருத்துக்கும் நன்றி.

அந்நியன் 2 said...

நோன்பு பற்றிய கருத்துக்களும்,திருக்குர்ஆன்

எடுத்துக்காட்டும்,படிக்க சுவாரஸ்யமாக இருந்துச்சுங்க.

துபையிலிருந்து ஒரு பெட்டி பேரிச்சம் பழம் அனுப்பி

வைக்கிறங்க.(ரோட்டிலே நிறையா பழுத்து கிடக்கு )

aysha abul said...

முகமது அயிப் கே,
உங்கள் கருத்துக்கு நன்றி.
துபாய்லிருந்து ஒரு பெட்டி
பேரிச்ச பழம் பத்தாது.
ஒரு கண்டெய்னர் பேரிச்ச பழம்
அனுப்பி வைக்கவும். உங்கள்
பெயரை சொல்லி எல்லோருக்கும்
கொடுத்து, நாங்களும் சாப்பிடுவோம்.
நோன்பு நேரம் அனுப்பி வைத்தால்
அதிகமான நன்மை கிடைக்கும்.

mohamedali jinnah said...

RAMADAN KAREEM
Assalamuallikum. May Allah keep us on the right path, and accept our fasting and prayers. We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors. Jazakkallahu khairan
Mohamed Ali jinnah

ஆயிஷா அபுல். said...

வ அழைக்கும் சலாம்...
ஆண்டவன் நம்மை நேர்வழி படுத்தி
நம்முடைய நோன்பை ஏற்றுகொண்ட
நோன்பாகவும் நம் தொழுகையை ஏற்றுக்கொண்ட
தொழுகையாகவும் ஆக்கித்தருவானாக ! ஆமீன்.
தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

தங்களின் வருகையும்,வாழ்த்தும் என்போன்றவர்களை
மேலும்,மேலும், ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அடிக்கடி என் வலைத்தளத்திற்கு வந்து உங்களின்
அறிவுரைகளையும்,ஆலோசனைகளையும் கூறுங்கள்.
இந்த புனித மிக்க ரமலானை நாம் எல்லோரும் சேர்ந்து சிறப்பாக கொண்டாடுவோம்.

" இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்"

அந்நியன் 2 said...

சகோதரிக்கு ஒரு சின்ன விளக்கம் :
ஆண்டவன் என்றால் ஆண்டு முடித்தவனுக்கு அர்த்தம் வருது !
அப்புறம் ..ஆண் +டவன் என்று ஆணையும் குறிக்கிற மாதுரி தெரியுங்க அதனாலே அல்லாஹ் அல்லது இறைவன் ,என்று எழுதலாமே ?

ராஜவம்சம் said...

அயூப் அவர்களுக்கு ஆண்டவன் என்ற சொல் ஆண்பால் என்று சொல்லியிறுக்கிறீர்கள் அது தவறான புரிதல் என்று நினைக்கிறேன்.

எப்படி?

குரானை பற்றியோ ஹதிஸை பற்றியோ தமிழில் எழுதவோ சொல்லவோ வேண்டும் என்றால்
இறைவன்,ஒருவன்,இருக்கின்றான்,அவன்,நம்மை படைத்தான், இது போன்றுதான் மொழிபெயர்க்க முடியும் இதுவரை எல்லோரும் இப்படித்தான் மொழிபெயர்த்துள்ளார்கள் இவை அனைத்தும் ஆண்பால் போன்ற சொற்கல் தான்

அரபியில் மற்றுமே இலக்கணத்தில் பால் அல்லாத ஒரு சொல் இறைவனைக்குறிக்கிறது.

இது சம்மந்தமாக விளக்க வேண்டும் நிறைய விசயங்கள் உள்ளன தேவப்பட்டாள் மெயிலில் தொடர்புக்கொள்ளவும் நன்றி.

aysha abul said...

சலாம் அயுப்,
உங்கள் விளக்கத்திற்கு சகோதரர் ராஜவம்சம் தெளிவாக விளக்கியுள்ளார்.
நாம் அல்லாஹ்வை குறிப்பிடும் ஒவ்வொரு சொல்லும் ஆண்பாளைத்தான்
குறிக்கும்.இருந்தாலும் நான் ஆண்டவன் என்ற இடத்தில் அல்லாஹ் எழுதி
இருக்கலாம்.

aysha abul said...

சலாம் ராஜவம்சம்,
சகோதரர் அயுப் கேள்விக்கு தெளிவாகவும்,
விளக்கமாகவும் பதில் சொல்லியதற்கு
என்னுடைய மனமார்ந்த நன்றி.

mohamedali jinnah said...

To see all posts and to select a post please add
Configure Blog Archive
(Total Comments :92)
Please visit http://nidurseasons.blogspot.com/ and you can see this in Blog Archive

Post a Comment