11 September 2011

நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்...

 

அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு  


என்   இனிய   இஸ்லாமிய   சொந்தங்களே  !  உங்கள்  மீது  இறைவனின்  சாந்தியும்  சமாதானமும்  என்றென்றும்  நிலவிட  வேண்டும்   என்பது  தான்  எனது  ஆவல். அதற்காகத்தான்   நானும்  உங்களுக்காக   இறைவனிடமிருந்து  இறக்கி  அருளப்பட்டிருக்கிறேன்.  நான்   சுவர்கத்தின்  லவ்ஹூல்  மஹ்பூல்   என்னும்   ஏட்டில்   வசித்து   வருபவன். இவ்வுலகில்   நான்  முதன்முதலில்  
ஆரத்தழுவி    கட்டி  அனைத்து  முத்தமிட்டது    நமதருமை  நாயகம் { ஸல் } அவர்கள் . மனிதர்கள்  அனைவரும்  என்னை  முத்தமிடுவீர்கள் . ஆனால்  நானோ  எம்பெருமானாரை  முத்தமிட்டவன்.


என்னை   சுமப்பதற்கு  நாயகம் {ஸல்} அவர்கள்  பட்ட  ஆரம்பம்  கட்ட  சிரம்மத்தை   நானும்   எனது  இறைவனுமே   நன்கு  அறிவோம்.  அதனை  சாதாரண   மனிதர்களாகிய   நீங்கள்  உணர்ந்து  கொள்ள  மாட்டீர்கள்.   இத்தனை   நெருக்கடிக்குள்ளும்   என்னை  சுமந்து   எனது  பெருமைகளை உணர்ந்து   எனது  சகவாசம்  உலகம்  அழியும்  வரைக்கும்  வாழக்கூடிய  நமது  உம்மத்தினர்  அனைவருக்கும்   வேண்டும்  என்பதற்காகத்தான்   ஆரம்பத்தில் 
என்னை  மாட்டுத்  தோலிலும்,மரக்கட்டைகளிலும்   என்னை  பதிய  வைத்து 
என்னை  ஓர்  பொக்கிஷமாக  உங்களிடம்   ஒப்படைத்து  உள்ளார்கள்  நாயகம் {ஸல்} அவர்கள்.  ஆனால்  நீங்களோ  எனது  சகவாசத்தை  விரும்பாமல், சைத்தானின்   சகவாசத்தை  விரும்ப  கூடியவர்களாக  ஆகிவிட்டீர்கள்..
"கூடாய்  நட்பு   கேடாய்  முடியும்  என்ற  பழமொழி " மறந்து  விட்டதோ ?

  
என்னை   மறக்க   ஆரம்பித்ததும்   எவ்வளவு   இழிவுகளையும்  சோதனைகளையும்  சந்தித்து   வருகிறீர்கள். எனது  சிறப்பைப் பற்றி   ஒரே  வழியில்  சொல்வதென்றால்  "ஹுதன்னில்  முத்தகீன்" இறையச்ச          முடையவர்களுக்கு   நேர்வழி  காட்ட  கூடியவனாக  இருக்கிறேன். யார்  என்ன  நம்பி  பின்  பற்றினாலும்   நிச்சயம்  நான்  அவர்களை   ஈருலகிலும்  நல்லோர்களாக  வாழச்செய்வேன்  என்பதை  அளவு  கடந்த  உறுதியுடன்  என்னால்  கூற  முடியும்.


இன்று  யார்  யாருக்கோ  பின்னால்  போய்  கொண்டிருக்கும்  மனிதர்களே !
அவர்களெல்லாம்  நாளை  மறுமையில்  உங்களுக்கு  துணை  நிற்பவர்கள்  என  நினைத்தால்   ஏமாந்து  தான்  போவீர்கள்.


டி.வி, என்ற  இப்லீஸின் நாசகார  கவர்ச்சி பெட்டிகள்  வருவதற்கு  முன்பெல்லாம்   வீடு தோறும்  குடும்ப   பெண்கள்  அதிகாலையே  எழுந்து சுபுஹு   தொழுகையை  முடித்து  விட்டு  என்னை  கரத்தில்  ஏந்தி  கம கமக்கும் 
சந்தன  ஊது  பத்தியின்  புகையில்  எனது  வசனங்களை  ஓதும்  போது  வெளியாகும்  அந்த  இனிமையான  ஓசை  தென்றல்  காற்றோடு  கலக்கும்  ரம்மியம்  தானே.  அன்றைய  மக்களின்  சங்கீதமாய்  இருந்தது.  ஆனால்  இன்றோ  நள்ளிரவு  வரை   டி.வியில்   தொடர்  சீரியலை  பார்த்து  விட்டு
உறங்குவதால்  பள்ளியில்  கூறப்படும்   அதிகாலை  பாங்கின்  ஓசைக்கு  எதிர்
ஓசையாய்   உனது   குறட்டை   சத்தம்  வெளியாவது   இறைவனின்  கோபத்திற்குரியதல்லவா? ஓ  ஜெயனும்பு  பீவியே  படைத்தவனையே  மறந்து  விட்ட  நீ  என்னையா  கையில்  எடுத்து   ஓதப்போகிறாய்?

 
எனதருமை   தெரியாத  மனிதர்களே !  என்னைப்பற்றி   அல்லாஹ்வின்  தூதர்
[ஸல்] அவர்கள்   கூறுவதைக்  கேளுங்கள். "திருக்குர்ஆனிலிருந்து  சிறதளவு  கூட  தம்  உள்ளத்தில்  மனனம்  இல்லாதவர்  பாழடைந்த  வீடு  போன்றவர்  ஆவார் "



என்னை  ஓதினால், பிறர்  ஓதக்  கேட்டால், மனனம்  செய்தல்   என  ஒவ்வொன்றுக்கும்   இறைவனிடத்தில்  நற்கூலி  கிடைக்கும்  என்பதை  மறந்து  விட்டீர்களா? வருட  முழுவதும்  என்னை  நினைத்து  வாழ்ந்த  நீங்கள்,
இன்றோ  வருடத்தில்  ஒரு  மாதம்  ரமளானில்  மட்டுமே  நினைக்க  கூடியவர்களாக  ஆகி  விட்டீர்கள்.உன் போன்ற  சந்தர்ப்ப  வாத  வேடதாரிகளை  நாளை  மறுமையில்  எனது  இறைவனுக்கு  முன்பாக  தோலுரித்து   காட்டுவேன்   என்பதை  நினைவில்  வைத்துக்  கொள்.


அறிவுள்ளவர்களுக்கு  மட்டும்   உறுதியாக  ஒன்றை  சொல்லிக்  கொள்கிறேன்.
யார்  என்னை  தங்களது  நெஞ்சத்தில்  வைத்து   பாதுகாககிறார்களோ? அவர்களின்  மரணத்திற்கு  பின்  மண்ணறை  வாழ்க்கையின்  போது  வேதனையை  விட்டும்  கொடிய  விஷமுள்ள  பாம்பு,  தேள் போன்ற  ஐந்துகளின்  தீங்கை  விட்டும்   நான்  அவர்களை  பாதுகாப்பேன்.  நாளை  மறுமையிலும்  இறைவனிடம்  பரிந்துரைப்பேன்.


என்னை  சுமந்து  வாழும்  இதயங்கள்  மட்டுமே   ஈருலகிலும்  ஒளிமயமாக  இருக்கும். என்னைபற்றி  இவ்வளவு  கூறிய  பிறகும்  தினந்தோறும்  நீ  என்னை
உன்  இதயத்தில்  சுமக்க  மறுத்தால்  நஷ்டம்  எனக்கல்ல. உனக்குத்தான்  என்பதை  நினைவில்  வைத்துக்கொள் !


                                                                                                         நன்றி
                                                                                  மாமா  ஹமீது  சுல்தான்  அவர்கள் 

-------------------------------------------------------------------------------------------------------------

அவர்களுடைய   தாவா   பணிகளைப்   பற்றி .....


அஸ்ஸலாமு அலைக்கும்..

கடந்தஒரு மாத காலமாக பல பயனுள்ள இஸ்லாமியத் தகவல்களை,கட்டுரைகளை மின் நூல்களாகத் தொகுத்து தங்களுடன் பகிர்ந்து கொண்டது மனதுக்கு நிறைவளிக்கிறது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
 
 இன்று உங்களில் பலர் வேலை நிமித்தம் அவைகளை Download செய்யாமல் கூட இருக்கலாம். தயவு செய்து நேரம் ஒதுக்கி அவைகளை பதிவிறக்கம் செய்து படித்துப் பயனடைய வேண்டுகிறேன். இதுவரை உங்களுடன் பகிர்ந்து கொண்ட நூல்களைப் பற்றி உங்களின் கருத்தினை ஒற்றை வரியிலாவது எழுதி அனுப்புங்கள். இது போன்ற தாவாப்பணி தொடர எனக்கு தெம்பாக இருக்கும். பல சகோதரர்கள் மவுனம் சாதித்தனர். ஒர் சிலர் கருத்துக்களை தெரிவித்தனர்.(அவர்களுக்கும் இவ்வேளை நன்றி).
இப்புனித ரமலான் மாதத்தில்,மட்டும் மொத்தம் 39,19,423 மெயில்கள், 25 குழுமங்கள் மூலமாக அனுப்பியிருக்கிறேன். இதில் 6 ஆங்கில குழுமங்கள் மூலமாக அனுப்பிய மெயில்கள்: 27,26,098. (ஆங்கிலம் மட்டும்)
தமிழும் ஆங்கிலமும் சேர்த்து 19 தமிழ் குழுமங்கள் மூலமாக அனுப்பிய மெயில்கள்:11,93,325.
இதில் முழுக்க முழுக்க தமிழ் பதிவுகள் மட்டும் 7,26,000 மெயில்கள்.
இதற்காக தினமும் செலவழித்த காலம்:16-18 மணி நேரங்கள்.
75க்கும் மேற்பட்ட ரமலான் சம்பந்தமான மின் நூல்களைத் (English and Tamil)தொகுத்து
.அனுப்பியுள்ளேன். அனைத்து மெயில்களும் குழுமங்களிலிருந்து வெளியான பிறகு உள்ள தகவல் இது.29உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குழுமம் முதல் 45,000 உறுப்பினர்களைக் கொண்ட பெரிய (masjidnabwi/medina university) குழுமம் வரையில் அனைத்து பதிவுகளும் வெளியாயின.
சென்னையில், புதுப்பேட்டையில் ஒரு அறையிலிருந்து மாத முழுவதும் 39 இலட்சத்துக்கும் மேற்பட்ட மெயில்கள் சென்றடைந்திருக்கின்றன. அல்ஹம்துல்லில்லாஹ்….


உடல் நிலையைப் பொறுத்த வரை மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும், ஏக இறைவன் கருணையினால் ஆயுள் நீடித்த நிலை. இதை அனுதாபத்தை வேண்டியோ, பெருமைக்காகவோ, முகஸ்துதிக்காகவோ சொல்லவில்லை. தாவாப் பணியினை எங்கிருந்தும், எப்போதும், எந்த நிலையிலும், எப்படியும்  செய்ய முடியும் என்பதற்காக இதை எழுதுகிறேன். அந்த வகையில் நான் தாவாப் பணியை செய்ய எடுத்துக் கொண்ட முறை தான் இணைய தளமும், மின் அஞ்சல் வழியும். கடந்த 6 வருடங்களாக இப் பணியினை செய்து வருகிறேன். 250க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மின் நூல்களை (ஸஹீஹ் புஹாரி,முஸ்லிம்,குர் ஆன் (தமிழ், ஆங்கிலம்), மருத்துவ கையேடுகள் போன்றவைகளை ஆக்கம் செய்து நம் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருவதுடன், எனது இணைய தளமான www.tamilislam.webs.com மூலமாக இலவசமாகவும் வழங்கி வருகிறேன். இப்போது ஸஹீஹ் முஸ்லிம் இரண்டாம் பாகம் தமிழில் மின் நூலாக தொகுக்கும் பணியினை தொடங்கியிருக்கிறேன்.
இனியும் இன்ஷா அல்லாஹ் இப் பணி தொடரும்..


அனுப்பிய மெயில்களில் எத்தனை மெயில்கள் எத்தனைப் பேரால் திறக்கப் பட்டது என்பது அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் நான் எனது கடமையாக நல்லதை எத்தி வைத்து விட்டேன். அதற்கான கூலியை இறைவன் எனக்கு அருள்வான்.இன்ஷா அல்லாஹ்.

மெயில்களை திறக்க மனதில்லா மனங்களை இவ்வேளை யா அல்லாஹ் திறந்து வைப்பாயாக!
இடையிடையே சில சகோதரர்கள், நான் ஏகத்துவத்தை எடுத்துக் கூறியதற்காக என்னை தரமற்ற வார்த்தைகளால் மெயில்கள் மூலம் சாடியதும் உண்டு. அவர்களது மனங்களிலும் அல்லாஹ் ஏகத்துவத்தை துளிர் விடச் செய்வானாக!


இந்த ரமலானில் நம்மிடையே இருப்பவர்கள் நான் உட்பட வரும் ரமலானில் இருப்போமா என்ற நிச்சயமற்ற நிலை. இன்ஷா அல்லாஹ் ஆயுள் நீடித்திருந்தால், மீண்டும் வரும் ரமலானில் சந்திப்போம்.
இறுதியாக சகோதரர்களே! உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..

 
இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது மின்னஞ்சல் மூலம் சந்திப்போம். வரும் ரமலானில் இது போன்று தினமும் சந்திப்போம். அது வரை நம் அனைவர்களின் ஆயுளையும் நீட்டித்து தர எல்லாம் வல்ல இறையோனை வேண்டுவோம்.
 
உங்கள் அனைவருக்கும் துவாச் செய்தவானாக நிறைவு செய்கிறேன்.
 
தங்களன்புள்ள,
Engr.சுல்தான்
சென்னை 2  ---------------------------------------------------------------------------------------------------------

அல்ஹம்துலில்லாஹ் ...


அவர்களுடைய   ஆக்கங்கள்  எல்லாம்  என் மெயிலுக்கும்  வந்தன.      எதையும்   காப்பி&பேஸ்ட்   பண்ண  முடியாது.  அனைவருக்கும்  சென்றடைய வேண்டும்  என்பதற்காக   இதை   என்  வலைப்பூவில்      வெளியிட்டுள்ளேன்.


இன்ஷா  அல்லாஹ்... இனி  அவர்களுடைய  ஆக்கங்கள்  சில  என் பதிவில்...


//சகோதரர்களே! உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..//



அனைவரும்     துஆ      செய்யும்படி     அன்புடன்      வேண்டிக் கொள்கிறேன் !

                                                
                                                      

20 comments:

ஜெய்லானி said...

//அவர்களுடைய ஆக்கங்கள் எல்லாம் என் மெயிலுக்கும் வந்தன. எதையும் காப்பி&பேஸ்ட் பண்ண முடியாது. அனைவரும் படித்து செயல்பட வேண்டும் என்பதற்காக இதை என் வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.//

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
டெக்னிக்கலாக எதையும் செய்யமுடியும் . இதுப்போனற நல்ல விஷயங்கள் நம்மை திரும்பவும் ரீ எனர்ஜியாக புதுப்பிக்க உதவும் .


மாஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் மிகப்பெரிய நற்க்கூலி அவருக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

ஆயிஷா அபுல். said...

///ஜெய்லானி சொன்னது…

அவர்களுடைய ஆக்கங்கள் எல்லாம் என் மெயிலுக்கும் வந்தன. எதையும் காப்பி&பேஸ்ட் பண்ண முடியாது. அனைவரும் படித்து செயல்பட வேண்டும் என்பதற்காக இதை என் வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.///

edit & post

அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இதை என் வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.

///அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
டெக்னிக்கலாக எதையும் செய்யமுடியும் . இதுப்போனற நல்ல விஷயங்கள் நம்மை திரும்பவும் ரீ எனர்ஜியாக புதுப்பிக்க உதவும் .


மாஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் மிகப்பெரிய நற்க்கூலி அவருக்கு காத்துக்கொண்டிருக்கிறது. ///

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...


உங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.ஆயிஷா அபுல்,
ரமளான் முழுக்க தினமும் //மாமா ஹமீது சுல்தான் அவர்கள்//---தங்கள் உறவுக்காரர்... Engr.சுல்தான் அவர்களுடைய ஆக்கங்கள் எல்லாம் என் மெயிலுக்கும் வந்தன. மிகச்சிறப்பான பணி. ஜசாக்கலாஹ் க்ஹைர்.

//உங்கள் அனைவருக்கும் துவாச் செய்தவானாக நிறைவு செய்கிறேன்.//
---இன்னும் ஒவ்வொரு ரமளானிலும் மென்மேலும் தங்கள் இறைப்பணி சிறப்புறவும், இந்த இறைப்பணிக்காக தாங்கள் ஈருலகிலும் நற்கூலியை அடைய வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

///~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.ஆயிஷா அபுல்,
தங்கள் உறவுக்காரர்... Engr.சுல்தான் அவர்களுடைய ஆக்கங்கள்

மிகச்சிறப்பான பணி. ஜசாக்கலாஹ் க்ஹைர்.

இன்னும் ஒவ்வொரு ரமளானிலும் மென்மேலும் தங்கள் இறைப்பணி சிறப்புறவும், இந்த இறைப்பணிக்காக தாங்கள் ஈருலகிலும் நற்கூலியை அடைய வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.//

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

அல்லாஹ் நம் அனைவருடைய துஆவை கபூலாககுவானாக!உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் துஆவிற்க்கும் மிக்க நன்றி சகோ

ஸாதிகா said...

பானு,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இவ்வழகிய நற் தொண்டுக்கு வல்ல நாயன் நற்கூலி வழங்குவானாக!

////சகோதரர்களே! உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..//
// கண்டிப்பாக..

அந்நியன் 2 said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மிக அழகாக எழுதியதுமில்லாமல் படிக்க தூண்டும் வகையில் அச்சு கோர்த்திருப்பது அவரின் திறமையாகும் எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.

வடிவமைத்து எங்களுக்கும் எத்தி வைத்த உங்களுக்கும் நன்றி சகோ.

தமிழ் மணமும் மற்றும் வாழ்த்துக்களும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

குர்ஆனின் வரலாற்றை அழகாக எழுதியிருக்கீங்க ஆயிஷா மச்சி. உங்க மாமா செய்துவரும் அளப்பரிய பணிகள் தொடரட்டும். அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.

ஆயிஷா அபுல். said...

///ஸாதிகா சொன்னது…

பானு,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இவ்வழகிய நற் தொண்டுக்கு வல்ல நாயன் நற்கூலி வழங்குவானாக!///


வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

ஆமீன்...ஆமீன்...ஆமீன்...

////சகோதரர்களே! உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..//
// கண்டிப்பாக..

அல்லாஹ் உங்கள் துஆவை கபூலாககுவானாக!

ஆயிஷா அபுல். said...

///அந்நியன் 2 சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)///

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...


///மிக அழகாக எழுதியதுமில்லாமல் படிக்க தூண்டும் வகையில் அச்சு கோர்த்திருப்பது அவரின் திறமையாகும் எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.

வடிவமைத்து எங்களுக்கும் எத்தி வைத்த உங்களுக்கும் நன்றி சகோ.
தமிழ் மணமும் மற்றும் வாழ்த்துக்களும்.///

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ,வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி சகோ

ஆயிஷா அபுல். said...

///Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

குர்ஆனின் வரலாற்றை அழகாக எழுதியிருக்கீங்க ஆயிஷா மச்சி.///

நன்றி கொழுந்தன்

///உங்க மாமா செய்துவரும் அளப்பரிய பணிகள் தொடரட்டும். அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.///

அல்லாஹ் நம் அனைவருடைய துஆவை கபூலாககுவானாக!

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கொழுந்தன்.

zalha said...

சலாமுன் அலைகும் சகோ! அல்லாஹ் தூய உள்ளத்துடன் அவனுக்காகவே செயற்படும் நம் சகோதரர்களின் பணிகளை மேலும் இலகுவாக்கி தருவதோடு அவற்றை பொருந்த்திக்கொல்வானாக!

ஆயிஷா அபுல். said...

zalha சொன்னது…

சலாமுன் அலைகும் சகோ!//

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

///அல்லாஹ் தூய உள்ளத்துடன் அவனுக்காகவே செயற்படும் நம் சகோதரர்களின் பணிகளை மேலும் இலகுவாக்கி தருவதோடு அவற்றை பொருந்த்திக்கொல்வானாக!///


ஆமீன்...ஆமீன்...ஆமீன்...

Ahamed irshad said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),


குர்ஆனைப் ப‌ற்றி இவ்வ‌ள‌வு அழ‌கான‌ முறையில் சொன்ன‌ உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் பாராட்டுக்க‌ள் ச‌கோத‌ரி.. மாஷா அல்லாஹ்..ம‌ன‌சு ரொம்ப‌ லேசான‌ மாதிரி ஒரு ஃபீலிங் இந்த‌ ப‌திவை ப‌டிச்ச‌ப்பிற‌கு..வாழ்த்துக்க‌ள் வாழ்த்துக்க‌ள்..தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்..ப‌டிக்க‌ நாங்க‌ இருக்கோம்..

ஆயிஷா அபுல். said...

///அஹமது இர்ஷாத் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),///

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...///

///குர்ஆனைப் ப‌ற்றி இவ்வ‌ள‌வு அழ‌கான‌ முறையில் சொன்ன‌ உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் பாராட்டுக்க‌ள் ச‌கோத‌ரி..///

ஸ்பெஷ‌ல் பாராட்டுககு நன்றி ச‌கோ.

///மாஷா அல்லாஹ்..ம‌ன‌சு ரொம்ப‌ லேசான‌ மாதிரி ஒரு ஃபீலிங் இந்த‌ ப‌திவை ப‌டிச்ச‌ப்பிற‌கு.///

அல்லாவுடைய வழியில் நாம் போனால் எப்பேர்பட்ட கஷ்டமும் நமக்கு இலேசாகத்தான் தெரியும். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்.

///தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்..ப‌டிக்க‌ நாங்க‌ இருக்கோம்..///

கண்டிப்பாக எழுத்துகிறேன். நீங்கலாம் படிப்பீர்கள்
என்ற நம்பிக்கையில் தான் .

///வாழ்த்துக்க‌ள் வாழ்த்துக்க‌ள்.///

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

ஆமினா said...

நல்லதொரு பகிர்வு ஆயிஷா

ஜஸக்கல்லாஹ் ஹைர்

ஆயிஷா அபுல். said...

///ஆமினா சொன்னது…

நல்லதொரு பகிர்வு ஆயிஷா

ஜஸக்கல்லாஹ் ஹைர்///

வருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆமினா.

Jaleela Kamal said...

அஸ்ஸ்லாமு அலைக்கும் ஆமீனா

நல்ல முயற்சி.

உங்கள் மாமாவின் உடல் நல்த்துக்கும் துஆ செயகிறேன்
. சகோ . குலசை சுல்தான் , அவர்களை 3 வருடம் முன்பு இருந்தே தெரியும் ,என்னக்கும் எல்லாம் மெயிலில் வந்துள்ளது முடிந்த வரை தோழிகளுக்கு அனுப்பியும் இருக்கேன்

ஆயிஷா அபுல். said...

///Jaleela Kamal சொன்னது…

அஸ்ஸ்லாமு அலைக்கும் ஆமீனா///

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

அவசரத்தில் ஆயிசாவுக்கு ஆமினா.

///நல்ல முயற்சி.///அல்ஹம்துலில்லாஹ்...

///உங்கள் மாமாவின் உடல் நல்த்துக்கும் துஆ செயகிறேன்///

அல்லாஹ் உங்கள் துஆவை கபூலாககுவனாக!

///சகோ . குலசை சுல்தான் , அவர்களை 3 வருடம் முன்பு இருந்தே தெரியும் ///

அவர்களும் குடும்பத்தாருடன் துபாயில் 25 வருடம் இருந்து விட்டு, வந்துதான் இந்த தாவா பணி.


///என்னக்கும் எல்லாம் மெயிலில் வந்துள்ளது முடிந்த வரை தோழிகளுக்கு அனுப்பியும் இருக்கேன் ///

அதற்கான நற்கூலியை இறைவன் உங்களுக்கு தந்தருள்வானாக!

Anonymous said...

கண்களின் ஓரம் நீர் கசிய(ஆனந்த கண்ணீர்) பதிவுகள் இட்ட அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் பல கோடி. இனி இவ்வலைப் பூவில்(மருமகளின்) எனது பதிவுகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்.
குலசை சுல்தான்.

Anonymous said...

கண்களின் ஓரம் நீர் கசிய(ஆனந்த கண்ணீர்) பதிவுகள் இட்ட அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் பல கோடி. இனி இவ்வலைப் பூவில்(மருமகளின்) எனது பதிவுகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்.
குலசை சுல்தான்.

Post a Comment