19 September 2011

1.இறை நேசர்களிடம் உதவி தேடுதல் –குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு... .பகுதி 1.



                                                                             


                                                                          
அஸ்ஸலாமு   அலைக்கும்   வ  ரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு...


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…


அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாராகவும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.

 
பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர். அவைகள் யாவை எனில்,
 
  1. நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம் நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்
  2. நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் அல்லாஹ்விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள்
  3. நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம்
  4. மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்
  5. நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத் தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?
  6. எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?  
அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.

1) இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், நாம் நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையில்லையா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அது போலத்தான் நாங்களும் இறைவனிடம் வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தை பற்றி அவர்கள் ஓரளவுக்கு கூட அறியாமல் இருப்பதே காரணம் ஆகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவாகளா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிருபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டணையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள்.
இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிவக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் இறைவன் கூறுகின்றானே!!!

 
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்(அல்குர்ஆன் 64:4)

 
இன்னும் பல வசனங்களில் 11:5, 67:13, 28:69, 2:284 அல்லாஹ் மட்டுமே இதயங்களிலுள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே!. நாம் கூறாமலே நமது தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் மனிதர்களிலுள்ள ஒரு வக்கீலோ அல்லது அதிகாயோ எடுத்துச் சொன்னால் தவிர அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் நாம் எப்படி உதாரணங்களாக கூறமுடியும்?. இது இறைவனின் கண்ணியத்தைக் குறைவாக கருதுவதாகாதா? இறைவனுக்கு நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாக கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாறு இறைவனுக்கு உதாரணங்களைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையான எச்சரிக்கின்றான்:
“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்குர்ஆன் 16:74)

 
ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே. அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால் உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)

 
2) நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது:-
இதுவும் அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குல தெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்திவாய்ந்தது, அது நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கிறது. அதனால் தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக் கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக்கொண்டவைகளில் சில நடைபெறுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப் போலவே நமது சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாகவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர்கள் கூறுவதைப் போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நர்ச்சை செய்தால் நிறைவேறுவது போல பிற சமுதயத்து வழிபாட்டுத்தலங்கிலும் நோச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறை வேறுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?


ஒவ்வொரு காரியமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என அல்லாஹ் கூறுகிறான். நமக்கு நடக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் இணைவைக்கும் இது போன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.


3) வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே:-
நாங்கள் பாவங்கள் பல செய்த பாவிகள், ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத்தருவார்கள் எனக்கூறுகின்றனர் கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் முஸ்லிம்களில் சிலர். இதுவும் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகும். நாம் பாவங்கள் நிறைய செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் பொருளை புரிந்துக் கொள்வதில்லை. அல்லாஹ் மிகப்பெரும் கருணையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்று திருமறையின் பல இடங்களில் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்:-


‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)


மேற்கண்ட வசனத்தில், ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பினும், அவர் அல்லாஹ்வுக்கே முற்றிலும் வழிபட்டு தம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பதாகக் கூறுகின்றான். ஆனால் பாவம் செய்தவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறுவது மேற்கண்ட வசனத்தை நிராகரித்தல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதாகளே!


4) நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-
இது கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் இன்னும் சிலரின் வாதமாகும். முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இறைவனின் விருப்பம். அதில் இறைவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே அவர்கள் விரும்பியது சில நேரங்களில் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை எப்படியாயினும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தாகள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருந்ததால் இறுதி வரை நபி (ஸல்) அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றித்தரவில்லை என்று வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க அமல் செய்ய யாரால் முடியும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த ஒரு அமலையும் செய்யமுடியாது. அவருக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.

 
அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறுகின்றான்:-
“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (அல் குர்ஆன் 16:20-21)
                                                                                       
                                                                                            தொடரும் ....   

                                                                                   இன்ஷா  அல்லாஹ்...  
                                                                                                  

                                              

 உங்கள்   சகோதரி
  ஆயிஷா  பானு.

23 comments:

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ., ஏகத்துவம் குறித்த விழிப்புணர்வு பதிவு! அதிலும் இறை நெருக்கம் வேண்டி இறை நேசர்களை முன்னிலைப்படுத்த அவர்கள் கூறும் காரணத்திற்கு தர்க்கரீதியாக மறுப்பதற்காக மேற்கோள்கள் கொடுத்த விதம் அருமை!

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. ((22:73))

இன்ஷா அல்லாஹ் தொடருங்கள் மேலும் உங்கள் இறைப்பணியை.,

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்...
நல்ல தெளிவான நல்வழி காட்டும் விபரமான பதிவு.
ஜஸாக்கல்லாஹு க்ஹைர், சகோ.ஆயிஷா பானு.

டாப்பில் உள்ள படம் மிக அருமை. ஆனால், அரபி அறியாதோர் குழம்ப வாய்ப்புண்டு. அவர்களுக்காக..:

இடது பக்கம் உள்ள படத்தில் "யா வலியுல்லாஹ்" என்று சமாதியில் அடங்கி இருக்கும் பெரியாரிடம் தம் தேவைகளுக்காக வேண்டுவதற்கு 'தப்பு' அடையாளம் போடப்பட்டிருக்கிறது. இதற்கு சிம்பாலிக்காக தர்ஹா படம் காட்டப்பட்டுள்ளது.

வலது பக்கம் உள்ள படத்தில் "யா ரப்" என்று இறைவனிடம் வேண்டுவதற்கு 'ரைட்டு' அடையாளம் போடப்பட்டிருக்கிறது. இதில் பள்ளிவாசலுக்கு சிம்பாலிக்காக மினாரா படம் காட்டப்பட்டுள்ளது.

அந்நியன் 2 said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

கப்ரு வணங்கிகள் திருந்திட துஆ செய்வோம்.

அழகான திரு குரான் அடிப்படையில் அமைந்துள்ளது பதிவு.

வாழ்த்thukkal

Speed Master said...

வணக்கத்துக்குரியவன் ஒருவனே
அவனிடம் எவரின் சிபாரிசும் எடுபடாது

அன்பு நண்பர்களே உதவி தேவை
http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஆயிஷா நல்லதொரு தெளிவூட்டும் பதிவுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

ஒவ்வொரு சந்தேகத்திற்கும் மிகத்தெளிவான விளக்கம் குடுத்திருக்கீங்க .ஜஸாக்கல்லாஹ் க்கைர் .

தொடரும்.? ....!!

இன்னும் அழகிய முறையில் எதிர்பார்க்கிரேன் இன்ஷா அல்லாஹ் :-)

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ சிறந்த பதிவு தொடருங்கள் உங்கள் சேவையை
நன்றி சகோ

ஆயிஷா அபுல். said...

///G u l a m சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்//

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

///இன்ஷா அல்லாஹ் தொடருங்கள் மேலும் உங்கள் இறைப்பணியை.,///

துஆ செயுங்கள் சகோ.

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

///~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்...///

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

///டாப்பில் உள்ள படம் மிக அருமை. ஆனால், அரபி அறியாதோர் குழம்ப வாய்ப்புண்டு. அவர்களுக்காக..:///

மாஷா அல்லாஹ்... போட்டோ அருமையா அமைந்து விட்டன.

கூகுளாருக்கு நன்றி.

உங்கள் வருகைக்கும்,விளக்கத்திற்கும் நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

///அந்நியன் 2 சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.///

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ.

sriganeshh said...

சில மாதங்களுக்கு முன்பு, வெப் ப்ரவுஸ் செய்கையில் ஒரு முஸ்லிம் அன்பரின் ப்ளாக் பார்த்தேன். அதில் அவர் புனித குரானை பற்றி விளக்கம் அளித்து வந்ததுடன், பிரபலமான விளக்க பேருரைகளையும் கொடுத்து வந்தார். மேலும் குரான் உட்பட எல்லாவற்றையும் டவுன்லோட் செய்யவும் வசதி செய்திருந்தார்.
என்னுடைய கம்ப்யூட்டர் crash அந்த லிங்க் இழந்துவிட்டது.
தங்களுக்கு எதாவது விபரம் தெரிந்தால் எழுதவும். நன்றி.

Aashiq Ahamed said...

சகோதரர் sriganeshh,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)

தாங்கள் கூறியுள்ள தகவல்களை வைத்து எந்த தளம் என்று கண்டுபிடிப்பது கடினம் சகோதரர். ஏனென்றால் பல இஸ்லாமிய தளங்கள் தாங்கள் சொல்லும் சேவைகளை செய்து வருகின்றன. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

ஆனால் இது குறித்த சிறிய உதவியை உங்களுக்கு என்னால் தர இயலும். கீழ்காணும் லிங்கில், இணையத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்களின் தளங்களின் பட்டியல் உள்ளது.

http://iraiadimai.blogspot.com/p/s.html

இதில் சென்று தாங்கள் தொலைத்த அந்த தளம் இருக்கின்றதா என்று பாருங்கள். இன்னும் சொல்லாப்போனால் தாங்கள் தேடும் தளம் இந்த பட்டியலை கொண்ட தளமாகவே கூட இருக்கலாம். அதாவது http://iraiadimai.blogspot.com/

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஆயிஷா அபுல். said...

///sriganeshh சொன்னது…

சில மாதங்களுக்கு முன்பு, வெப் ப்ரவுஸ் செய்கையில் ஒரு முஸ்லிம் அன்பரின் ப்ளாக் பார்த்தேன். அதில் அவர் புனித குரானை பற்றி விளக்கம் அளித்து வந்ததுடன், பிரபலமான விளக்க பேருரைகளையும் கொடுத்து வந்தார். மேலும் குரான் உட்பட எல்லாவற்றையும் டவுன்லோட் செய்யவும் வசதி செய்திருந்தார்.
என்னுடைய கம்ப்யூட்டர் crash அந்த லிங்க் இழந்துவிட்டது.
தங்களுக்கு எதாவது விபரம் தெரிந்தால் எழுதவும். நன்றி.///


சகோதரர் sriganeshh அவர்கள்

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும்
சமாதானமும் நிலவட்டுமாக...ஆமீன்...

புனித குரானை பற்றி விளக்கம் {லிங்க்}கேட்டமைக்கு ரெம்ப ரெம்ப நன்றி சகோ

சகோதரர் ஆஷிக் அஹமத் அவர்கள் கொடுத்த லிங்க் பார்க்கவும்.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

///Aashiq Ahamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு///

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

உதவிக்கு ஜசாக்கல்லாஹ் க்ஹைர்...

ஆயிஷா அபுல். said...

///Speed Master சொன்னது…

வணக்கத்துக்குரியவன் ஒருவனே
அவனிடம் எவரின் சிபாரிசும் எடுபடாது

அன்பு நண்பர்களே உதவி தேவை
http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html///

நல்ல வேலை கிடைக்க இறைவன் நாடட்டும்.
தாங்கள் தொழுது துஆ செய்யவும்.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.

சகோதர,சகோதரிகளே

சகோதரர் சையத் முஸ்தஃபா {Speed Master} அவர்களுக்கு உங்களால் முடிந்த ஹெல்ப் பண்ணவும்.

ஆயிஷா அபுல். said...

///ஆமினா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்///

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

///ஆயிஷா நல்லதொரு தெளிவூட்டும் பதிவுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்///

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஆமினா.

ஆயிஷா அபுல். said...

///ஜெய்லானி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

///ஒவ்வொரு சந்தேகத்திற்கும் மிகத்தெளிவான விளக்கம் குடுத்திருக்கீங்க .ஜஸாக்கல்லாஹ் க்கைர் .

தொடரும்.? ....!!

இன்னும் அழகிய முறையில் எதிர்பார்க்கிரேன் இன்ஷா அல்லாஹ் :-)///

துஆ செயுங்கள் சகோ.

எழுதுகிறேன் ...இன்ஷா அல்லாஹ்...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

///ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு


///சகோ சிறந்த பதிவு தொடருங்கள் உங்கள் சேவையை
நன்றி சகோ///

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

sriganeshh said...

@ஆஷிக் அவர்களுக்கு,

மிக்க நன்றி. தேடிப் பார்க்கிறேன்.

@ ஆயிஷா அவர்களுக்கு,

நன்றி. தங்கள் தயவால் அனேகமாக நான் தேடும் லிங்க் நெருங்கி விட்டேன் என்று நம்புகிறேன்.
சிறு சந்தேகம்... நீங்கள் குறிப்பிடும் 'துஆ' என்பது 'துவா' தானா. அதாவது இறைவனிடம் பிரார்த்திப்பது அல்லது வேண்டுவது இல்லை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டா???

மீண்டும் நன்றி,

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும்
மிக்கத்தெளிவான விளக்கம் எடுத்து போட்டு இருக்கீங்க
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

ஆயிஷா அபுல். said...

///sriganeshh சொன்னது…

@ ஆயிஷா அவர்களுக்கு,

///நன்றி.///

நன்றி சகோதரர் ஆஷிக் அஹமத் அவர்களுக்கு


///தங்கள் தயவால் அனேகமாக நான் தேடும் லிங்க் நெருங்கி விட்டேன் என்று நம்புகிறேன்.///

அல்ஹம்துலில்லாஹ் ...{எல்லாபுகழும் இறைவனுக்கே}

//சிறு சந்தேகம்... நீங்கள் குறிப்பிடும் 'துஆ' என்பது 'துவா' தானா.//

துஆ என்பது துவா தான்.


//அதாவது இறைவனிடம் பிரார்த்திப்பது அல்லது வேண்டுவது இல்லை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டா???//

இரண்டும் ஒன்று தான்.நம்பிக்கையோடு கேளுங்கள். வெற்றி அடைவீர்கள்.


மேலும் விபரம் தேவைப்பட்டால்

aashiq.ahamed.14@gmail.com

தொடர்புகொள்ளவும்.

உங்கள் வருகைக்கும்,விளக்கம் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ.

என்னுடைய இன்னொரு பிளாக்

http://puthiyavasantham.blogspot.com

ஆயிஷா அபுல். said...

///Jaleela Kamal சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு


//மிக்கத்தெளிவான விளக்கம் எடுத்து போட்டு இருக்கீங்க
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.//


உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி

The Tamil Language said...

assalamu alaikkum
sooniyum enbathu unda illaiya?(islam sattathin padi,)

Post a Comment