11 August 2011

புனித ரமளானில் நாம் !

                                                                              
                                                                        

அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு 


உலகத்தையே  படைத்தாளும்  வல்ல  இறைவனாகிய   அல்லாஹ்  இந்த 
ரமலானையும்   நமக்கு  வழங்கி  கருணை புரிந்திருக்கிறான்.முதலாவதாக 
இறைவனிடத்திலிருந்து   ஓர்  அருட்கொடை  வழங்கப்பட்டால்  உடனே நாம் இறைவனுக்கு   நன்றி  செலுத்திட  வேண்டும். அருட்கொடைகளில்   சிறந்த 
ரமலானை  வழங்கியதற்காகவும்  அல்லாஹ்வுக்கு   அதிகமாக  நன்றி செலுத்த  வேண்டும்.

 
இறுதி   தூதரான   முகம்மத்  {ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம்}
அவர்கள்   ரமலான்  மாதம்   வந்ததும்  தோழர்களிடம்  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி  நற்ச்செய்தியை  கூறுகிறார்கள் ......
இம்மாதத்தில்  அல்லாஹ்   உங்கள்  மீது  நோன்பை   கடமையாக்கி  உள்ளான். சொர்கத்தின்  கதவுகளை  உங்களுக்குகாக  திறந்து  வைக்கிறான்.
நரகத்தை   சாத்தி  வைக்கிறான்.


மக்கள்   அனைவரும்  உலக  விசயங்களில்  செயல்  பட  துல்லியமாக        திட்ட  மிடுகிறார்கள்.  ஆனால்  மறுமை   வாழ்வுக்காக  எந்த  திட்டமிடுதலும் இல்லாமல்   அலட்சியமாக   உள்ளனர். உண்மையான  நிரந்தமான வாழ்க்கை  எது  என்பது  பற்றி  இறை  நம்பிக்கையாளர்கள்  நன்றாக அறிந்திருக்க  வேண்டும்.  அதற்காக  இந்த  ரமலானைக்  கொண்டும்  முடிந்த அளவு   மறுமை  பயன்களை  அடைந்திட  திட்டமிட  வேண்டும்.  



தன்  மனதை  கட்டுப்படுத்தி  மறுமை  வாழ்வுக்காக  திட்டமிட்டு  செயல்படுபவன்  தான்  புத்திசாலி  என்று  நபி  {ஸல்} அவர்கள்  கூறுகிறார்கள்.இவ்வகையில்  மனதோடு  போராடும்  தன்மையை  வளர்த்து அல்லாஹ்வுக்கும்,  அவனுடைய  தூதருக்கும்  முற்றிலும்  அடிபணியக்  கூடிய பண்பை  வழங்குகிறது புனித  ரமலான் .  இந்த  பயிற்சியை  ரமலான்  நமக்கு வழங்குவதால்  தான்  நபி  {ஸல்}  அவர்கள்  மிகுந்த  முக்கியத்துவம்  அளித்து,சத்திய   தோழர்களையும்  உற்சாகமூட்டியுள்ளார்கள்.


நோன்புக்கு  நானே  கூலியாவேன்  என்று  வாக்குறுதி  அளித்துள்ள  அல்லாஹ்  அதற்கு  சில  நிபந்தனைகளையும்   விதிக்கிறான். செயல்களின் 
தரத்தைப்  பொறுத்து  எண்ணத்  தூய்மையை  பொறுத்து  ஒவ்வொரு 
நற்செயலுக்கும்  பத்து  முதல்  எழுநூறு  மடங்குவரை  நன்மைகளை  வழங்குகின்ற  அல்லாஹ்,  நோன்பாளி  தன்  பசியையும்,  இச்சையும், தாகத்தையும்  தனக்காகவே  பொறுத்துக்  கொள்கிறான்  என்பதால்  அதற்கான கூலியை   தானே  வழங்குவதாக--நானே கூலியாக  ஆகி  விடுவதாக  கூறுகிறான். அந்த  பெரும்  நல்வாய்ப்பை  பெற  வேண்டுமென்றால்  அதற்கு சில  தகுதிகளை  விதிகின்றான்.
                      
                                                                              

இதை  அல்லாஹ்வுடைய  தூதர்{ஸல்}அவர்கள்  தெளிவு  படுத்துகிறார்கள்.

பொய்  பேசுவதை  விட்டும், பொய்யான  காரியங்களை  விட்டும்  விலகி 
விடாமல், அவர்கள்  பட்டினி  கிடப்பதாலும்  தாகத்துடன்  இருப்பதாலும் 
இறைவனுக்கு  எந்தத்  தேவையுமில்லை .{அஹ்மத்  புகாரி }

சாப்பிடாமல்,  குடிக்காமல்  இருப்பதெல்லாம்  நோன்பாகாது . வீணான 
ஆபாசமான  செயல்களை  விட்டும்  விலகி   இருப்பதுதான்  நோன்பாகும் .

மேலும்  இறைவழியில்  செலவழிப்பது , வாரி  வழங்குவது,  அன்பையும், 
ஆதரவையும்   வெளிப்படுத்துவது, ஆதரவற்றவர்களை  ஆதரிப்பது,         தேவையுடையவர்களை   தேடிச்சென்று  உதவுவது  முதலான   சமூக  சேவைகளை  ரமலான்  நமக்கு  பயிற்சியளிக்கிறது .

ஆதரவற்றவர்களுக்காகவும்,  வறியவர்களுக்காகவும்  பாடுபடுபவன்  இறைவழியில்  போராடும்  வீரத்  தியாகியைப்  போன்றவன்  அல்லது 
இரவு  முழுக்க  நின்று  தொழுது,  பகல்  முழுக்க நோன்பிருந்தவனைப்  
போன்றவன்  என்று   நபி {ஸல்}  அவர்கள்  கூறுகிறார்கள் .{புகாரி  முஸ்லிம்}



நபியவர்களின்   மேற்கண்ட  உயர்ந்த  நற்செயல்களில்  ஈடுபட்டு,  நாம் 
நிறைவான  நோன்பை  வைத்து,  நம்முடைய  மனதின்  கடிவாளத்தை முழுக்க  முழுக்க நம்  பிடிக்குள்  கொண்டு  வந்து  விட்டால், பிறகு  நாம் சொல்வதைத்தான்  நம்  மனம்  கேட்கும். அதாவது  நம்  மனம்  நமக்கு  அடிமைப்பட்டுவிடும்.  இந்த  மிக உயர்ந்த  பயிற்சியைத்தான்  ரமளானின் 
நோன்பு  நமக்கு  அளிக்கிறது.



நீங்கள்  நோன்புற்றவராக  இருந்தால், உங்களுடைய  காதுகளும்,
கண்களும்  நோன்பிருக்க  வேண்டும்.  அதே  சமயம்  உள்ளத்தில்  நீ  அமைதியையும், நிம்மதியையும்  உணர  வேண்டும். நோன்பிருக்கிற  நாளும்,  மற்ற  நாட்களும்  ஒன்று  போல  இருக்கக்கூடாது. 



நோன்பாளிகள்  இவற்றைக்   கவனித்து,  ஆபாசமான  தொல்லைக்   காட்சிகள், சச்சரவுகளை  பரப்புகின்ற  சஹர்  நேர  சானல்கள்,அனைத்து  விதமான  வீணான  செயல்களை  விட்டும்  நீங்கி, அல்லாஹ்வின்  மீது  மட்டும்  பற்றும்,  பாசமும்  வைத்து  அல்லாஹ்வின்  நெருக்கத்தை   நோக்கி  மென்மேலும்  முன்னேறுகின்ற  நோன்பாளிகளாக  நாம்  அனைவரும்  திகழ்வோமாக !



   

16 comments:

ஸாதிகா said...

//அதாவது நம் மனம் நமக்கு அடிமைப்பட்டுவிடும். இந்த மிக உயர்ந்த பயிற்சியைத்தான் ரமளானின்
நோன்பு நமக்கு அளிக்கிறது.
// அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள் ஆயிஷா.ஜஸகல்லாஹு கைரன்.

RAZIN ABDUL RAHMAN said...

வ அலைக்கும் ஸ்லாம் சகோ.

நோன்பிம் மாண்பையும்,கண்ணியத்தையும் அழகாக எடுத்தியம்பியுள்ளீர்கள்...

//ஆபாசமான தொல்லைக் காட்சிகள், சச்சரவுகளை பரப்புகின்ற சஹர் நேர சானல்கள்,அனைத்து விதமான வீணான செயல்களை விட்டும் நீங்கி,//

நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று,,,

அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்க போதுமானவன்..

அன்புடன்
ரஜின்
----------------------------
அப்ரம் உங்கள் பார்வைக்கு!!
//ராமலானையும் நமக்கு//ரமலான்
//நிரந்தனமான//-நிரந்தரமான
//ராமலானைக் கொண்டும்//-ரமலான்
//கடைமையாக்கி//-கடமையாக்கி

நான் என்ன பண்ண??கண்ணில் பட்டுவிட்டது...

(எங்கேயாவது நாம சிக்கிட்டா ஒடனே செட்டு சேந்துர வேண்டியது..ம்ம்..:)

அந்நியன் 2 said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

நல்லதொரு விளக்கம்.

சகோ ரஜின் ஏதோ சொல்கிறார் பார்க்கவும் அல்லது திருத்தி அமைக்கவும்.

நன்றி சகோ.

ஆயிஷா அபுல். said...

//ஸாதிகா சொன்னது…//


தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்
ரெம்ப நன்றி.

ஆயிஷா அபுல். said...

//RAZIN ABDUL RAHMAN சொன்னது…

நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று,,,

அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்க போதுமானவன்..// அல்ஹம்துலில்லாஹ்


//நான் என்ன பண்ண??கண்ணில் பட்டுவிட்டது...//

தவறை சுட்டிகாட்டியதற்கு ரெம்............ப நன்றி சகோ.

//(எங்கேயாவது நாம சிக்கிட்டா ஒடனே செட்டு சேந்துர வேண்டியது..ம்ம்..:)//

ம்ம்....

ஆயிஷா அபுல். said...

//அந்நியன் 2 சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
வ அலைக்கும் ஸ்லாம் சகோ.

//நல்லதொரு விளக்கம்.// நன்றி சகோ.


//சகோ ரஜின் ஏதோ சொல்கிறார் பார்க்கவும் அல்லது திருத்தி அமைக்கவும்.//

திருத்தி விட்டேன் சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ்...
சகோ.ஆயிஷா அபுல்,

ரமளான் பற்றி மீண்டும் ஒரு நல்ல பதிவு சகோ. பகிர்ந்தமைக்கு நன்றி.

//சச்சரவுகளை பரப்புகின்ற சஹர் நேர சானல்கள்//---நன்மைக்காக இவற்றை ஆரம்பிக்க போய்... இறுதியில் இப்படியா ஆக வேண்டும்..? தற்சமயம் நாம் கவனிக்க வேண்டிய மிகவும் அவசியமான விஷயம் இது..!

ஆயிஷா அபுல். said...

//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ்...
சகோ.ஆயிஷா அபுல்,

ரமளான் பற்றி மீண்டும் ஒரு நல்ல பதிவு சகோ. பகிர்ந்தமைக்கு நன்றி.


//நன்மைக்காக இவற்றை ஆரம்பிக்க போய்... இறுதியில் இப்படியா ஆக வேண்டும்..? தற்சமயம் நாம் கவனிக்க வேண்டிய மிகவும் அவசியமான விஷயம் இது..! //


வ அலைக்கும் ஸ்லாம் வரஹ்


தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
ரெம்ப நன்றி சகோ.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

அல்ஹம்துலில்லாஹ்....மிக முக்கிய விஷயங்களை நினைவூட்டும் பதிவு...

///பொய் பேசுவதை விட்டும், பொய்யான காரியங்களை விட்டும் விலகி
விடாமல், அவர்கள் பட்டினி கிடப்பதாலும் தாகத்துடன் இருப்பதாலும்
இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை .{அஹ்மத் புகாரி }///

Makes lot of sense. இதற்கு பெயர் தான் தர்க்கரீதியான விளக்கம். அல்ஹம்துலில்லாஹ். சும்மா வாயளவில் "நான் நோன்பு இருக்கின்றேன்" என்று சொல்லிவிட்டு பாவச் செயல்களில் ஈடுபடுவதால் என்ன லாபம்??. அம்மாதிரி ஆட்களுக்கு மேலே பார்த்ததை கூறி சவுக்கடி கொடுத்திருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

////ஆதரவற்றவர்களுக்காகவும், வறியவர்களுக்காகவும் பாடுபடுபவன் இறைவழியில் போராடும் வீரத் தியாகியைப் போன்றவன் அல்லது இரவு முழுக்க நின்று தொழுது, பகல் முழுக்க நோன்பிருந்தவனைப்
போன்றவன் என்று நபி {ஸல்} அவர்கள் கூறுகிறார்கள் .{புகாரி முஸ்லிம்}////

அல்ஹம்துலில்லாஹ்...என்னவொரு அற்புத உபதேசம்.

///சச்சரவுகளை பரப்புகின்ற சஹர் நேர சானல்கள்///

இறைவன் பகுத்தறியும் ஆற்றலை கொடுத்திருக்கின்றான். நல்லதை ஆதரித்து மற்றதை புறம் தள்ளுவோம்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

ஆயிஷா அபுல். said...

Aashiq Ahamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

அல்ஹம்துலில்லாஹ்....மிக முக்கிய விஷயங்களை நினைவூட்டும் பதிவு...

//Makes lot of sense. இதற்கு பெயர் தான் தர்க்கரீதியான விளக்கம். அல்ஹம்துலில்லாஹ். சும்மா வாயளவில் "நான் நோன்பு இருக்கின்றேன்" என்று சொல்லிவிட்டு பாவச் செயல்களில் ஈடுபடுவதால் என்ன லாபம்??. அம்மாதிரி ஆட்களுக்கு மேலே பார்த்ததை கூறி சவுக்கடி கொடுத்திருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...என்னவொரு அற்புத உபதேசம்.

இறைவன் பகுத்தறியும் ஆற்றலை கொடுத்திருக்கின்றான். நல்லதை ஆதரித்து மற்றதை புறம் தள்ளுவோம்.//


வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....


தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

வாஞ்சையுடன் வாஞ்சூர். said...

அருட்கொடையாம் தொழுகை.

தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


CLICK AND READ.
>>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

>>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<


>>>
முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ?
<<<

>>>
க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்?
<<<


வாஞ்சையுடன் வாஞ்சூர்.

ஆயிஷா அபுல். said...

//வாஞ்சையுடன் வாஞ்சூர். சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

தங்களின் வருகைக்கும், அருமையான ஆக்கங்களுக்கும் எனது நன்றி. தொடர்ந்து இது போல் நல்ல ஆக்கங்களை தரவும்.

இறைவன் உங்களுக்கு நற் கூலியையும் நீண்ட ஆயுளையும் தருவானாக!என்னுடைய துஆக்கள் .

ஜஸக்கல்லாஹு க்ஹைர்

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பயனுள்ள மாதத்தில் பயனுள்ள பதிவு

இறைவன் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக

ஆயிஷா அபுல். said...

//ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வ அலைக்கும் ஸலாம் வரஹ்....

//பயனுள்ள மாதத்தில் பயனுள்ள பதிவு
இறைவன் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக//

ஜஸக்கல்லாஹு க்ஹைர்

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,துஆவிற்கும் ரெம்ப நன்றி சகோ.

தமிழ்த்தோட்டம் said...

தேவையான பகிர்வு

ஆயிஷா அபுல். said...

//தமிழ்த்தோட்டம் சொன்னது…

தேவையான பகிர்வு//

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

Post a Comment